Corona Virus

“மதவெறுப்பை பரப்புவோரே... இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியரை தெரியுமா?” #Covid19 - Hydroxy Chloro Quine

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் இஸ்லாமியர் மீது வெறுப்புணர்வை பரப்பும் இந்நேரத்தில் இந்தியாவை தலைநிமிர வைத்த ஓர் இஸ்லாமியரின் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

“மதவெறுப்பை பரப்புவோரே... இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியரை தெரியுமா?” #Covid19 - Hydroxy Chloro Quine
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"ஹைட்ராக்ஸி குளோரோகுயின்" மருந்தைத் தராவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டியதும் உடனடியாக, மருந்துகளை அளிப்பதாக அறிவித்தது மோடி அரசு.

மிரட்டலுக்குப் பயந்து அனுப்பிவிட்டு மனிதாபிமானம் என பா.ஜ.க ஆதரவாளர்கள் கம்பு சுற்றினர். தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் தொற்று பரவியதாக வெறுப்புணர்வையும் பரப்பினர் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். இந்நேரத்தில் இந்தியாவை தலைநிமிர வைத்த ஓர் இஸ்லாமியரின் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

1920களில், இந்தியாவில் ஒரு பணக்காரர் தனது மகனை பம்பாயிலிருந்து ஐக்கிய இராஜ்யத்திற்கு ஒரு கப்பலில் ஏற்றி சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று ஒரு பேரறிஞராக மாற அனுப்பினார். அந்த நேரத்தில் நாட்டின் அனைத்து பெரிய தனவந்தர் குடும்பங்களிடையேயும் இதுதான் நாகரீகமாக இருந்தது. இருப்பினும், அந்தச் சிறுவன் ஒரு வழக்கறிஞராக விரும்பவில்லை. அவரது உள்ளம் முழுவதும் வேதியியலில் லயித்திருந்தது. அதுமட்டுமின்றி, வேதியியல் துறையோ அந்த நாட்களில் எதிர்காலம் இல்லாமல் தோன்றியது.

ஆனால், அவரது தந்தை அவருக்கு சிறியதொரு வாய்ப்பைக் கொடுத்தார், அதாவது, அவரை கப்பலில் தனியே அனுப்பி வைத்தார். எனவே, கப்பல் புறப்பட்டு செல்லும்போது தனது தந்தையிடம் கை அசைத்துக் கொண்டிருந்தபடியே... கப்பலின் மேல் தளத்தில் நின்ற க்வாஜா அப்துல் ஹமீத், தன் மனதினுள் மற்றொரு செயல்திட்டத்தை தீட்டிக்கொண்டிருந்தார். கடந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், வேதியியல் மற்றும் வேதிப்பொருட்களின் ஆய்வில் முன்னணியில் இருந்த ஜெர்மனியில் தரையிறங்க முடிவுகட்டினார்.

லண்டன் நோக்கிச் சென்ற கப்பலில் இருந்து கடலில் குதித்தார். எப்படியோ ஜெர்மனியை அடைந்தார். அங்கே அவர் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார். கம்யூனிஸ்டாக இருந்த ஒரு ஜெர்மன் யூத பெண்மணியை மணந்தார். நாஜிக்கள் மிகவும் வெறுத்த இருவர் இந்த தம்பதி. ஆனால் அவர்கள் ஹிட்லரின் 'கெஸ்டபோ' எனும் ரகசிய போலிஸ் வசம் பிடிபடுவதற்கு முன்பு, அவர்கள் ஜெர்மனியிலிருந்து தப்பி பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்தனர்.

“மதவெறுப்பை பரப்புவோரே... இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியரை தெரியுமா?” #Covid19 - Hydroxy Chloro Quine

க்வாஜா அப்துல் ஹமீத், 1935 ஆம் ஆண்டில்... Chemical, Industral and Pharmaceutical Laboratories எனும் வேதியியல், தொழில்துறை மற்றும் மருந்து ஆய்வகங்களை அமைத்தார், இதுவே, சுதந்திரத்திற்கு பல தசாப்தங்களுக்குப் பிறகு CIPLA (சிப்லா) என பிரபலம் ஆகி சுருக்கப்பட்டது.

க்வாஜா அப்துல் ஹமீத்... மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெரும் ரசிகராக இருந்தார். உண்மையான தேசியவாத மனப்பான்மையில், சாதாரண மக்களுக்கு மலிவான விலையில் பொதுவான மருந்துகளை தயாரிப்பதில் இறங்கினார். மலேரியா மற்றும் காசநோய்க்கான மருந்துகள் மட்டுமல்லாமல் பிற சுவாசக் கோளாறுகள், இருதய நோய்கள் மற்றும் வழக்கமான மற்றும் கீல்வாதம் ஆகியவையும் இதில் அடங்கும்.

1970களில், சிப்லா நியூயார்க்கில் புரூக்ளினில் இருந்து ஒரு அமெரிக்க மருந்து நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற ப்ராப்ரானோலோல் என்ற மருந்தை தயாரிக்கத் தொடங்கியது. இது இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு இருதுருவ உலகில், அமெரிக்கா இந்தியாவின் நண்பராகவும் இல்லை; உண்மையான வல்லரசாகவும் இல்லை. டொனால்ட் ட்ரம்பைப் போலல்லாமல், அன்று உலகின் எந்தவொரு நாட்டிற்கும் அதன் கட்டளைகளுக்கு இணங்க அச்சுறுத்தல்களை வெளியிட வேண்டிய அவசியமுமில்லை.

அமெரிக்கா இந்திய அரசிடம் புகார் அளித்தது. ஆனால் கடந்த வாரம் நரேந்திர மோடி செய்ததைப் போலல்லாமல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக சரணாகதிக்கு செல்லவில்லை. க்வாஜாவின் மகனான யூசுப் ஹமீதுவிடம் பேசினார். அவர், கேம்பிரிட்ஜில் படித்த வேதியியல் பட்டதாரி, அப்போது அவர்தான் சிப்லா நிறுவனத்தின் இயக்கத்தை எடுத்துக் கொண்டு நடத்தியவர். "மருந்துப்பொருள் தொடர்பான காப்புரிமைச் சட்டத்தை எவ்வாறு மீறி இந்தியாவை சிக்க வைக்கலாம்?" என்று திருமதி இந்திரா காந்தி கேட்டபோது, ​​யூசுப், தனது தந்தையின் கதையையும், அவர் ஏன் இந்த நிறுவனத்தை அமைத்தார் என்பதையும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை ஏழைகளுக்குக் கொண்டு வரவே அமைத்தார், என்பதையும் சொன்னார்.

“மதவெறுப்பை பரப்புவோரே... இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியரை தெரியுமா?” #Covid19 - Hydroxy Chloro Quine

ஆம். அவர் தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைத்தபோது, ​​க்வாஜா யூசுப்பிடம் ஒரு விஷயத்தை மட்டுமே கூறியிருந்தார் - 'இந்த நிறுவனம் ஏன் நிறுவப்பட்டது என்பதை நினைவில் கொள். உலகெங்கிலும் உள்ள பிற மருந்து நிறுவனங்களைப் போலல்லாமல், நாம் இங்கு லாபம் ஈட்டுவதற்காக இருக்கவில்லை. ஆனால், தரமான மருந்துகளின் தேவைக்காக இறக்க நேரிடும் ஏழைகளுக்கு நிவாரணம் மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காகவே இருக்கிறோம்."ஆம். அவர் செய்து கொண்டிருந்தது அவ்வளவுதான்.

ஏழைகளுக்கான அக்கறையுடன் பரிவு கொள்ளக்கூடிய இந்திரா காந்தியிடம், யூசுப் இவ்வாறு கூறியதும், 'மருந்துப்பொருளை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும்' என்ற அமெரிக்காவின் கட்டளையை இந்திய பிரதமர் நிராகரித்தார். அமெரிக்கர்கள் இதற்காகவும் மற்ற மீறல் செயல்களுக்காகவும் இந்திராவை கடுமையாக வெறுத்தனர், ஆனால், பிரதமர் இந்திராவுக்குள், எப்போதும் தனது சொந்த சக குடிமக்களின் நலன்களுக்கு முன்னுரிமை இருந்தது.

யூசுப்பின் ஆலோசனையின் பேரில், மருந்துகள் மீதான இந்திய காப்புரிமைச் சட்டத்தையும் பிரதமர் இந்திரா மாற்றி அமைத்தார். அதாவது, 'புதிய காப்புரிமை சட்டத்தின்படி, மருந்துப்பொருளை சேர்க்கக்கூடாது; ஆனால், அதன் உற்பத்தி செய்யும் செயல்முறையை மட்டுமே வேறு யாரும் காப்புரிமையில் மீறமுடியாது', என்று சட்டம் மாற்றப்பட்டது. இதனால், சிப்லா முன்னோக்கி சென்று ஏழைகளுக்கு முடிந்தவரை குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை தயாரிக்க முடிந்தது. அப்போதிருந்து சிப்லா, எயிட்ஸ்- எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்க குறைந்த விலையில் மருந்து தயாரித்து, ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல வளரும் நாடுகளுக்கு தருகின்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது, அங்கு பெரும்பாலான எச்.ஐ.வி மற்றும் ஏழை நோயாளிகள் ஒரு காலத்தில் இருந்தனர்.

மலேரியா, லூபஸ் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தயாரிக்கும் நிறுவனமும் இதுதான். இது பலவீனமான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலின் கீழ் அமெரிக்காவிற்கு இவ்வளவு பெரிய அளவில் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, ஏழை இந்தியர்களை வஞ்சிக்கிறது.

அந்த மருந்துப்பொருளை ஏற்றுமதி செய்வதில் ட்ரம்ப் இந்தியாவை மிரட்டுவதற்கு முன்பே, மலேரியா (மற்றும் காசநோய்) பொதுவாகக் காணப்படும் நாடுகள் எல்லாம், கொரோனா வைரஸ் தாக்குதலில்... மலேரியா கிட்டத்தட்ட இல்லாத நாடுகளை விட குறைவாக பாதிக்கப்படுவதை பம்பாயில் உள்ள சைஃபி மருத்துவமனையின் தொற்று நோய்களுக்கான சிறப்பு டாக்டர் ஹமீதுதீன் பர்தாவாலா கூறியிருந்தார்.

மலேரியா கிட்டத்தட்ட இல்லாத நாடுகள் எவை..? அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், கனடா போன்றவைதான்..! வேறுவிதமாகக் கூறினால், அதிகபட்ச தொற்றுநோய்களை சந்தித்த நாடுகள் அவை. ஜெர்மனியைப் பற்றி நான் நினைக்கும் போது... ஒருவேளை அன்று... நம் க்வாஜா அப்துல் ஹமீத் மற்றும் அவரது மனைவி ஜெர்மனி நாஜியின் ரகசிய போலிஸ் ஆன 'கெஸ்டபோ'விடம் பிடிபட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்டிருந்தால்... இப்போது HCQ ஐ வழங்கியதற்காக இந்தியாவுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கும் இந்த நாடுகள்... 'இன்று இவ்வுலகில் எங்கே இருந்திருக்கும்?' என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..!

முஸ்லிம்களை மிகவும் அந்நியப்படுத்த செய்து கொடுமைப்படுத்திய மற்றும் இந்த நோயை மதவாதமாக்கிய இந்த நாட்டின் பேரினவாதிகளுக்கு இது இன்னும் பலமாக அடியாக விழுகிறது. நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் எதிர்கால தலைமுறையினர் அதற்கு பலியாக வேண்டி இருக்கும். அவர்களில் பலருக்கு கடந்த காலங்களில் மலேரியா வந்திருக்கலாம். மற்றும் HCQ உடன் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம், இது COVID-19 ஐ எதிர்க்க தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்க உதவும்.

அவர்களிடையே ஏற்படக்கூடிய பல துன்பங்களுக்கு இந்த மருந்துடன் சிகிச்சை தேவைப்படும். தெரியாமல், அவர்கள் இந்த "முஸ்லிம்" நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல பொதுவான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கலாம், மேலும் அவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும்... இந்த ஹமீதுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.

“மதவெறுப்பை பரப்புவோரே... இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியரை தெரியுமா?” #Covid19 - Hydroxy Chloro Quine

சிப்லாவைப் போல... ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதற்கு இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் இல்லை; ஏன், நிச்சயமாக இந்த உலகிலேயே இல்லை..! மேலும் அதன் ஆராய்ச்சி குறித்து அது கஞ்சத்தனமாகவும் இருக்கவில்லை, எவ்வளவோ செலவு செய்கிறது. அதுமட்டுமின்றி, பெரும்பாலும் மருந்துப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளைக்கூட மற்ற இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சிப்லா வழங்குகிறது. அதன் மூலம் மருந்து உற்பத்தியில் நம் நாட்டை சொந்தக்காலில் நிற்க வைக்கிறது.

1947ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, பம்பாய்வாசியும், க்வாஜா அப்துல் ஹமீத் வாழ்ந்த அதே சமூக வட்டங்களில் வாழ்ந்தவருமான முஹம்மது அலி ஜின்னா, குவாஜாவுக்கு பாகிஸ்தானுக்கு கவுரமகா குடியேற அழைப்பு வழங்கினார். ஆனால், காந்திஜியுடன்தான் தங்கள் அனுதாபங்கள் இருக்கின்றன என்றுரைத்த குவாஜா அப்துல் ஹமீத், இதுவே தன் தாய்நாடு என்பதில் உறுதியாக இருந்து, இந்தியாவிலேயே தங்கத் தீர்மானித்தார். இப்படியும் இந்நாட்டில் முஸ்லிம்கள் உள்ளனர்.

ஒரு சில மதவெறியர்களின் செயல்களுக்காக அனைத்து இந்துக்களையும் குறிவைப்பது சரியானதல்ல. அதேபோல், ஒரு சில தப்லீக் ஜமாஅத்திகள் ஒரு முழு சமூகத்தையும் உருவாக்குவதில்லை. ஒரு சிலரின் செயல்களுக்காக நாம் அனைவரையும் அரக்கர்களாக்குவதை நிறுத்த வேண்டும்!

நன்றி : நேஷனல் ஹெரால்ட்

கட்டுரையாளர் : சுஜாதா ஆனந்தன்

தமிழில் : முஹம்மது ஆசிக்

banner

Related Stories

Related Stories