Corona Virus

கொரோனா நோயாளிகளுக்காக வென்ட்டிலேட்டருக்கு மாற்றாக CPAP கருவி தயாரித்த பென்ஸ் நிறுவனம்! #Covid19

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடெஸ் வென்ட்டிலேட்டருக்கு பதில் மாற்று கருவியை உருவாக்கியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகெங்கும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. அதில், 1 லட்சத்து 36 ஆயிரத்து 48 பேர் உயிரிழந்த நிலையில், 5 லட்சத்து 23 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த தொற்று பாதிப்பால், உலகெங்கிலும் 51 ஆயிரத்து 109 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நிமோனியாவுடன் ஒத்த இந்த கொரொனா வைரஸ் தன்னுடைய அதி தீவிரத்தால் சுவாசிக்கும் திறனை மட்டுப்படுத்துவதால், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்காக வென்ட்டிலேட்டருக்கு மாற்றாக CPAP கருவி தயாரித்த பென்ஸ் நிறுவனம்! #Covid19

குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய உபாதைகள் இருப்பவர்களை வெகு விரைவில் தாக்குதலுக்குள்ளாக்குகிறது. இதனால், செயற்கை சுவாசக் கருவியான வென்ட்டிலேட்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வென்ட்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

ஏனெனில், நோயாளிகள் பலரில் பெரும்பான்மையானோர் முதியவர்களாக இருப்பதால், அவர்களின் தொண்டைக்குழிக்குள் இந்த வென்ட்டிலேட்டர் கருவிகளை பொருத்தும்போது இன்னல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்காக வென்ட்டிலேட்டருக்கு மாற்றாக CPAP கருவி தயாரித்த பென்ஸ் நிறுவனம்! #Covid19

இந்த நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த உலகின் பிரபல கார் நிறுவனமான மெர்சிடெஸின் ஃபார்மலா ஒன் பிரிவு, வென்ட்டிலேட்டர்களுக்கு பதிலாக CPAP (Continuous Positive Airway Pressure) என்ற மாற்று செயற்கை சுவாசக் கருவியை தயாரித்துள்ளது. இத்தாலி மற்றும் சீன நாடுகளில் இந்த வகையான செயற்கை சுவாசக் கருவிகள் நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க உதவியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, இந்தக் கருவிகள் தற்போது லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை கருவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் நுரையீரல் தொடர்பான அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் இத ஏற்றதாக இருக்குமா என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories