Corona Virus

“பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரிப்பு; 15 பேர் உயிரிழப்பு” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,242 ஆக இருந்த நிலையில் தற்போது 1,267-ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,242 ஆக இருந்த நிலையில் தற்போது 1,267-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1267-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உள்ளது. தமிழகத்தில் அரசு சார்பாக 17, தனியார் சார்பில் 10 என மொத்தம் 27 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

“பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரிப்பு; 15 பேர் உயிரிழப்பு” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று எளிதாகப் பரவும் என்பதால் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories