Corona Virus

“நிவாரண உதவிகளை வழங்க அனுமதி தேவையில்லை” : தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி! #LOCKDOWN

கொரோனா நிவாரண உதவிகளை வழங்குவதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும். அனுமதி பெறத் தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பரவிவரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன் ஏற்பாடுகள் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலன ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளி மாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 13ம் தேதி அன்று மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்க அரசியல் கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் தடை விதித்து அ.தி.மு.க அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக தொடர அனுமதி கோரி தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்ற பதிவுத்துறையில் முறையீடு செய்துள்ளார்.

“நிவாரண உதவிகளை வழங்க அனுமதி  தேவையில்லை” : தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி! #LOCKDOWN

இதனையடுத்து, இந்த வழக்கு நிதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் போதும். அனுமதி பெறத் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிவாரணப் பொருட்களை வாகன ஓட்டுநர் உள்பட 4 பேர் சென்று வழங்கலாம். நிவாரணம் வழங்குவோர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நிவாரணப் பொருள் வழங்குவது குறித்து 48 மணி நேரத்துக்கு முன் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories