Corona Virus

“கொரோனாவை தடுக்க 2022 வரை தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்” - ஹார்வர்டு பல்கலை. அதிர்ச்சி தகவல்!

2022ம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

“கொரோனாவை தடுக்க 2022 வரை தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்” - ஹார்வர்டு பல்கலை. அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022ம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வாக உள்ளது.

2003ம் ஆண்டு சிறிய அளவில் தலைகாட்டிய 'சார்ஸ்' வைரஸ், இடைவெளிக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது. அதேபோல் கொரோனா வைரஸும் மீண்டும் பரவி பெரும் தாக்குதலை நடத்துவதற்கு முன் அதை அழிக்கத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியம்.

“கொரோனாவை தடுக்க 2022 வரை தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்” - ஹார்வர்டு பல்கலை. அதிர்ச்சி தகவல்!

இல்லையெனில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா வைரஸ் மீண்டும் தலைகாட்ட வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு நாட்டில் தொற்றத் தொடங்கினாலும் உலகம் முழுக்கப் பரவும் ஆபத்து உள்ளது.

இதனால் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே இந்த வைரஸிலிருந்து மனித குலத்தைக் காக்க முடியும். குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளிலும் மக்கள்தொகை அதிகமுள்ள சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலும் கட்டாயம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கணக்கில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனக் கூறப்படுகிறது. ஊரடங்கின் காரணமாக பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. எனவே, கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதே தீர்வைத் தரும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories