Corona Virus

“வெயில் வந்தால் கொரோனா போய்விடும்” - வதந்தியைப் பரப்பும் அ.தி.மு.க பிரமுகர் - நடவடிக்கை எப்போது? (Video)

கொரோனா பரவல் தொடர்பாக வதந்தியை பரப்பும் விதமாகப் பேசியுள்ள அ.தி.மு.கவின் கோவை செல்வராஜ் மீது நடவடிக்கை பாயுமா என கேள்வி எழுந்துள்ளது.

“வெயில் வந்தால் கொரோனா போய்விடும்” - வதந்தியைப் பரப்பும் அ.தி.மு.க பிரமுகர் - நடவடிக்கை எப்போது? (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸை விட அது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளும், கட்டுக்கதைகளும், மருத்துவக் குறிப்புகளும் மக்கள் மத்தியில் அலட்சியப் போக்கையும், வைரஸ் பரவல் ஆபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, வெயிலில் சென்றால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது. கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டாலும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் போன்ற ஆங்கில மருந்துகளை உட்கொண்டாலும் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற தகவல்கள் அனுதினமும் சமூக வலைதளங்களில் பரவிய வண்ணம் உள்ளன.

“வெயில் வந்தால் கொரோனா போய்விடும்” - வதந்தியைப் பரப்பும் அ.தி.மு.க பிரமுகர் - நடவடிக்கை எப்போது? (Video)

இதன் காரணமாக, கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வதந்தியை நம்பி கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை மக்கள் அதிகம் கூடும் பகுதியில் விற்பவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

இப்படி இருக்கையில், அ.தி..முகவைச் சேர்ந்த கோவை செல்வராஜ், தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின்போது “இந்த கொரோனா தமிழகத்துக்கு மட்டும் வந்த நோயல்ல. வெயில் அதிகமாக இருக்கும்போது கொரோனா வைரஸ் மடிந்துவிடும். தனிமைப்படுத்தப்பட்ட 2 லட்சத்து 6 ஆயிரத்து 612 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு ஆவேசமடைந்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், “ கடுமையான வெயில் இருந்தால் கொரோனா அழிந்துவிடும் என யார் கூறியது? அப்படி இருந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தாக்கமே இருந்திருக்காது. படித்து, தெரிந்துகொண்டு வந்து பேசுங்கள்.” எனப் பேசியுள்ளார்.

ஆனால், தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகமே, தமிழ்நாட்டில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேலானாவர்களுக்கு மட்டுமே ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இதுபோன்று வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வரும் தமிழக காவல்துறை, அ.தி.மு.கவைச் சேர்ந்த கோவை செல்வராஜ் மீதும் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories