Corona Virus

“பிரசவமான 22 நாளில் கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய IAS அதிகாரி” - கொரோனா தடுப்புப் பணியில் தீவிரம்!

கொரோனா தடுப்பு பணிக்காக மகப்பேறு விடுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கூடவே இறப்பு விகிதமும் அதிகரிப்பதால் ஊரடங்கு உத்தரவில் கெடுபிடி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக நோயாளிகளுக்கான மருத்துவப் பணியாளர்களின் சேவையும், சட்டம் ஒழுங்கை சீரமைப்பதற்கு அதிகாரிகளின் சேவைக்குமான தேவைகளும் அதிகரித்து வருகிறது.

“பிரசவமான 22 நாளில் கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய IAS அதிகாரி” - கொரோனா தடுப்புப் பணியில் தீவிரம்!

ஆகையால், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் என பலரும் விடுப்பு எடுக்காமல், ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஓய்வுபெற்ற அதிகாரிகளையும், மருத்துவ பணியாளர்களும் இந்த கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஸ்ரீஜனா ஐ.ஏ.எஸ். தன்னுடைய ஆறு மாத பேறுகால விடுமுறையை ஒதுக்கிவைத்து விட்டு, பிரசவமான 22 நாட்களில் அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார்.

கைக்குழந்தையுடன் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்ரீஜனா ஐ.ஏ.எஸ். இவரது இந்த செயலுக்கு வழக்கறிஞராக உள்ள தனது கணவர் மிகவும் உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார் ஸ்ரீஜனா. மேலும், பாதுகாப்பான சூழலிலேயே குழந்தையை உடன் வைத்துள்ளேன் என்றும், குழந்தைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீஜனாவின் இந்த செயல் அனைத்து அதிகாரிகளுக்கும் சிறந்த ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஐ.ஏ.எஸ். அசோசியேஷனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக ஸ்ரீஜனாவின் பணி திரும்புதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த கொரோனா தடுப்பு பணியில் தமிழகத்தின் டாக்டர்.பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்., டாக்டர்.பிரியா ஆப்ரஹாம், பிரித்தி சுதன் ஐ.ஏ.எஸ்., டாக்டர் நிவேதித்தா குப்தா, டாக்டர் ரேனு ஸ்வரூப் என பல்வேறு பெண் அதிகாரிகள் மிகவும் முனைப்புடன் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories