Corona Virus

“ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழணுமே? பட்ஜெட்டில் இருந்து ரூ.65,000 கோடியை தாருங்கள்” : ப.சிதம்பரம்

21 நாட்களாக ஏழை எளிய மக்கள் எதிர்ப்பார்ப்பது பண உதவிதான் என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் காரணமாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை (ஏப்.,14) காலை 10 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களுக்கு காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பது குறித்து பிரதமரும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தினக்கூலி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த 15 நாட்களுக்கான அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ட்விட்டரில் பிரதமர் மோடியின் நாளைய உரையை தானும் கவலையுடனும், ஆவலுடனும் எதிர்பார்க்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஏப்ரல் 30 வரை ஊரடங்கைத் தவிர்க்க முடியாது என தோன்றுகிறது. ஆனால், ஊரடங்கை நீட்டித்தாலும் மக்கள் வாழவேண்டுமே. ஆகவே மத்திய அரசின் 2020-21ம் ஆண்டின் பட்ஜெட்டில் 30 லட்சம் கோடி ரூபாய் செலவீனத்திற்கு இருக்கிறது.

அதில் இருந்து ரூ.65 ஆயிரம் கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் மோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் இதனை அவர் செய்வாரா மாட்டாரா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது. ஏனெனில், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் எதிர்ப்பார்ப்பது பண உதவியே. இது நாட்டுடைய மற்றும் நம்முடைய பணம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories