Corona Virus

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்தும் மெத்தனம் காட்டுகிறதா எடப்பாடி அரசு?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்தும், நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டி வருகிறது தமிழக அரசு. அதற்கு இந்த ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பே உதாரணம்.

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்தும் மெத்தனம் காட்டுகிறதா எடப்பாடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் கடந்த மார்ச் 25ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. அதன் பிறகு கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது.

இதன் பொருட்டு,தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், பிரதமருடனான ஆலோசனையின் போதும் அதனையே வலியுறுத்தினர்.

இந்நிலையில், நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 3ம் இடத்தில் உள்ள தமிழகத்திலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இன்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்தும் மெத்தனம் காட்டுகிறதா எடப்பாடி அரசு?

1,173 பேர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டதோடு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு உள்ளதால் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அரசு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் ஏப்ரல் 30 வரை தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 வழங்கப்படும்.

பிறமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்கான 15 கிலோ அரசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். அதேபோல, உணவகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை போன்று, பேக்கரிகளும் பார்சல் விற்பனைக்காக காலை 6 முதல் 1 வரை இயங்கலாம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள மக்கள் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ‘டெலி மெடிசின் சொஸைட்டி ஆப்’ இந்திய நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற வழிவகை செய்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்தும் மெத்தனம் காட்டுகிறதா எடப்பாடி அரசு?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்தும், நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டி வருகிறது தமிழக அரசு. அதற்கு இந்த ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பே உதாரணம். பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்த நிலையில் பாதிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் தமிழக அரசு அமைதி காத்தது.

மோடியின் அறிவிப்பை பின்பற்றுவோம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் தெரிவித்தார். இது கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், இன்று மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்து தற்போது அரசின் தீவிர நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு அதைச் செய்யத் தவறி மக்களின் உயிரோடு விளையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories