Corona Virus

CORONA நெருக்கடி: “வெளிநாடுகள் இந்திய நிறுவனங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்” - ராகுல் காந்தி அட்வைஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 2.8 சதவிகிதமாக குறையும் என ஏற்கெனவே உலக வங்கி எச்சரித்திருந்தது.

CORONA நெருக்கடி:  “வெளிநாடுகள் இந்திய நிறுவனங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்” - ராகுல் காந்தி அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதார நிலை மோசமான கட்டத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கும், தினக் கூலித் தொழிலாளர், சிறு,குறு வியாபாரிகள் முதற்கொண்டு, பெரிய நிறுவனங்களும் தொடர்ந்து மந்தநிலையை சந்தித்து வருகின்றன.

CORONA நெருக்கடி:  “வெளிநாடுகள் இந்திய நிறுவனங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்” - ராகுல் காந்தி அட்வைஸ்!

21 நாள் ஊரடங்கு 19 நாட்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்போ நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகையால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை மேலும் 2 வார காலத்திற்காகவாவது நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆகையால், குறைந்தபட்சம் ஏப்ரல் 30 வரை இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விரைவில் பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் மத்திய மோடி அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில், “நாட்டில் நிலவும் பெரிய அளவிலான பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய நிறுவனங்கள் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இது போன்ற தேசிய நெருக்கடி நிலவும் சமயத்தில் இந்திய நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்திய பொருளாதாரத்திற்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடுமையான சரிவை ஏற்படுத்தும். 2019-20ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறையும் என கூறியிருந்த நிலையில் கோவிட் 19 காரணமாக 2020-21ல் 2.8 சதவிகிதமாகக் குறையக் கூடும் என உலக வங்கி அறிக்கை வெளியிட்டு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories