Corona Virus

கொரோனாவிற்கு அலட்சியம் காட்டும் ட்ரம்ப்: ‘தனி தேசிய அரசாக செயல்படுவோம்’ - கலிபோர்னியா ஆளுநர் அதிரடி!

அமெரிக்க அதிபர் டொனல் ட்ரம்பின் அலட்சியத்தால் கொரானா பாதிப்புகள் முடியும் வரை ‘கலிபோர்னியா தனி சுதந்திர தேசிய அரசாக செயல்படும்’ என அம்மாகாண ஆளுநர் கெவின் நியூசம் அறிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு அலட்சியம் காட்டும் ட்ரம்ப்: ‘தனி தேசிய அரசாக செயல்படுவோம்’ - கலிபோர்னியா ஆளுநர் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த வாரம் முதலே புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 3 நாள்களில் 10,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் 6,000 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 533,115 -ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,580 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிற்கு அலட்சியம் காட்டும் ட்ரம்ப்: ‘தனி தேசிய அரசாக செயல்படுவோம்’ - கலிபோர்னியா ஆளுநர் அதிரடி!

அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா பகுதிகளில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நியூயார்க் மாகாணத்தில் மட்டுமே 181,144 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,627 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரங்களில் 22,409 பேருக்கு தொற்று ஏற்படுள்ளது. 633 பேர் உயிரிழந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த அதிகமான பாதிப்புக்கு அதிபர் ட்ரம்பின் அலட்சியமான நிர்வாக திரனேக் காரணம் என மாகாணங்களின் ஆளுநர்கள் கூறிவருகின்றனர்.

முன்னதாக புல்லட் ரயில்களை விட கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு தெரிவித்தார். 30,000 சுவாச கருவிகள் (வென்ட்டிலேட்டர்) தேவைப்படும் இடத்தில் வெறும் 7000 சுவாசக் கருவிகள் மட்டுமே உள்ளன என்றும் அவர் வேதனையும் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகும் மிகவும் தாமதமாகத்தான், வென்ட்டிலேட்டர் தயாரிக்கும் கருவிகளை உற்பத்தி செய்ய ட்ரம்ப் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

கொரோனாவிற்கு அலட்சியம் காட்டும் ட்ரம்ப்: ‘தனி தேசிய அரசாக செயல்படுவோம்’ - கலிபோர்னியா ஆளுநர் அதிரடி!

இன்னும் பல மாகாணங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணமும், மருத்துவமனைக்கு தேவையான உபகரணமும் சென்றவடைவில்லை. அதனால் கலிபோர்னியா போன்ற பெரிய மாகணமே மிகப் பெரிய சிக்கலை சந்தித்துவருகிறது.

இதனால் கோவமடைந்த அம்மாகாணத்தின் ஆளுநர் மாநிலத்தை கொரானா பாதிப்புகள் முடியும் வரை கலிபோர்னியா தனி சுதந்திர நாடாக செயல்படும் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே, அமெரிக்காவில் இருந்து கலிபோர்னியா மாகாணம் தனி சுதந்திர நாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ட்ரம்பின் அலட்சியத்தால் பல உயிர்கள் போவதை கண்டு, கொரானா பாதிப்புகள் முடியும் வரை கலிபோர்னியா தனி சுதந்திர தேசிய அரசாக செயல்படும் என சுய நிர்ணய (Self Determination Rights) என அம்மாநில ஆளுநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்தித்த கலிபோர்னியாவின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு அலட்சியம் காட்டும் ட்ரம்ப்: ‘தனி தேசிய அரசாக செயல்படுவோம்’ - கலிபோர்னியா ஆளுநர் அதிரடி!

இதுதொடர்பாக கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலிபோர்னியா மாகாணத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் அமெரிக்க அரசு தோல்வியை சந்தித்துள்ளது. பாதிப்பு கடுமையாகும் இந்நேரத்தில் கலிபோர்னியா மாகாணம் தன்னிச்சையாக செயல்பட முடிவெடுத்துள்ளது.

தேவையான மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுகாதாரத்திற்கு முன்னுரிமைக் கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை கலிபோர்னியா மகாண நிர்வாகம் எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி இக்கட்டான நெருக்கடிக் காலத்தில் வெள்ளை மாளிகை ஒருபோது உதவிகளை செய்யாது என மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் அமெரிக்காவின் மத்திய அரசு வழங்க தவறிய வழங்கத் தவறிய மருத்துவமனை பொருட்களைப் பெறுவதற்கு கலிபோர்னியாவின் மொத்த கொள்முதல் சக்தி வாங்க முடிவு எடுத்துள்ளது.

கொரோனாவிற்கு அலட்சியம் காட்டும் ட்ரம்ப்: ‘தனி தேசிய அரசாக செயல்படுவோம்’ - கலிபோர்னியா ஆளுநர் அதிரடி!

அதனால் “ஒரு தேசிய அரசுகளின் உரிமைப்படி” கொரானா பாதிப்புகள் முடியும் வரை கலிபோர்னியா தனி சுதந்திர தேசிய அரசாக செயல்படும் என சுய நிர்ணய (Self Determination Rights) செய்து இந்த அறிவிப்பை வெயிடப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

நியூசம் அறிவிப்பு அம்மாகாண மக்களிடை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வல்லரசு என தம்பட்டம் அடிக்கும் நாடான அமெரிக்கா அந்நாட்டு மக்களை காக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories