Corona Virus

“கொரோனாவால் 18,747 பேர் பலி; 1.6 கோடி பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்திலும் பலத்த அடி வாங்கும் அமெரிக்கா!

கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் கடந்த 3 வாரத்தில் 1.6 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்

“கொரோனாவால் 18,747 பேர் பலி;  1.6 கோடி பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்திலும் பலத்த அடி வாங்கும் அமெரிக்கா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 102,734 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 1,699,631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 376,327 ஆக உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த வாரம் முதலே புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

“கொரோனாவால் 18,747 பேர் பலி;  1.6 கோடி பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்திலும் பலத்த அடி வாங்கும் அமெரிக்கா!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 1,973 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,02,876 -ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,747 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 1,72,358 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,844 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக நியூஜெர்சியில் 54,588 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,932 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 3 நாட்களாக பலி எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக கடந்த 3 நாளில் சுமார் 6,000 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவால் 18,747 பேர் பலி;  1.6 கோடி பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்திலும் பலத்த அடி வாங்கும் அமெரிக்கா!

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 3 வாரத்தில் 1.6 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 97 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 3 வாரத்தில் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 66 லட்சம் பேர் வேலை இல்லாதோருக்கான அரசின் சலுகையை பெற புதிதாக விண்ணப்பித்து உள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories