Corona Virus

“தென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் கொரோனா” : அதிர்ச்சியில் உலக நாடுகள்!

தென் கொரியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும்  கொரோனா” : அதிர்ச்சியில் உலக நாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. ஆனால் இதில் ஆரம்ப கட்டத்திலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிகம் தொற்று ஏற்பட்டது தென் கொரியாவில் தான்.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடாக உருவெடுத்திருந்த தென் கொரியா, அதீதிவிர முயற்சியினால் விரைவிலேயே கொரோனாவைக் கட்டுப்படுத்தியது. அதனால், குறைந்த அளவிலான தொற்று எண்ணிக்கையே தினமும் உறுதி செய்யப்பட்டது.

தென் கொரியா முழுவதும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு அப்படி பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு அரசு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

“தென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும்  கொரோனா” : அதிர்ச்சியில் உலக நாடுகள்!

குறிப்பாக, அங்கு 10,450 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 7,117 பேர் குணமடைந்துள்ளனர். 3,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 208 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மிகவும் சொற்ப எண்ணிக்கையில் நோய்த் தொற்று பரவி வருவதாகவும், தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் விரைவில் நோய்த் தொற்றே ஏற்படாத நிலையை எட்டிவிடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறிவந்தது. உலக நாடுகள் பலவும் தென் கொரியாவின் இந்த முயற்சிகளைப் பாராட்டி வந்தன.

இந்நிலையில், தென் கொரியாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தென் கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ஜியோங் யூன்- கியோங் கூறுகையில், “கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து சென்ற 91 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும்  கொரோனா” : அதிர்ச்சியில் உலக நாடுகள்!

இது மீண்டும் தொற்றியுள்ளது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இவர்களுக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை; உடலில் செயலிழந்த வைரஸ் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்திருக்கலாம். அதனால் இதுதொடர்பாக மருத்துவக்குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

மேலும் குணமடைந்த 7,000 பேரில் 91 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது ஆரம்ப நிலைதான். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையில் இருந்த உலக நாடுகளுக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா என்பதனை உலக சுகாதார மையம் விளக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories