Corona Virus

“இதுதான் சமூக விலகல்” - படித்த மேதாவிகளுக்கு பாடம் புகட்டிய கேரள சாலையோரவாசி - நெகிழ்ச்சி வீடியோ! #Corona

கேரளாவில் அரசின் சமூக விலகல் அறிவுறுத்தலை மிகச் சிறப்பாக கடைபிடித்து வருகிறார் சாலையோரத்தில் வசிக்கும் நபர். 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவுவதை தடுக்கும் விதமாக முதன் முதலில் கேரள மாநிலத்தில் Break The Chain என்ற அடிப்படையில் சமூக விலகல் கடைபிடிக்க தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகு நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளைத் தவிர மக்கள் வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நாட்டின் வெறேந்த மாநிலத்தை விடவும், கேரளாவில் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் சமூக விலகலை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும், ரேஷன் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் வெளியே வரும்போதும் சமூக விலகலை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமயங்களில் அரசே வீடுகளுக்குச் சென்றும் தேவையான பொருட்களை விநியோகித்து வருகிறது.

“இதுதான் சமூக விலகல்” - படித்த மேதாவிகளுக்கு பாடம் புகட்டிய கேரள சாலையோரவாசி - நெகிழ்ச்சி வீடியோ! #Corona

இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையோரம் வசிக்கும் நபர் ஒருவர் கச்சிதமாக அரசு அறிவுறுத்திய சமூக விலகலை கடைபிடிக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், உணவு அளிப்பதற்காக வந்த போலிஸாரை தன் பக்கம் வருவதை தவிர்ப்பதற்காக தொலைவிலேயே இருக்கச் செய்துவிட்டு, மண் தரையில் ஒரு வட்டமிட்டு அங்கு சாப்பாடு பொட்டலங்களை வைக்குமாறு சொல்கிறார் அவர். போலிஸாரும் அதன்படியே உணவை வைத்துவிட்டுச் செல்கின்றனர். அதன் பிறகு அந்த உணவை எடுத்து சாப்பிடத் தொடங்குகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் பலரது மனங்களை வென்றிருக்கிறது. ஏனெனில், நன்கு படித்து பட்டம் பெற்றவர்களே சமூக விலகலை கடைபிடிப்பதை அசவுகரியமாக கருதும் வேளையில், சாலையோரத்தில் வசிக்கும் நபர் அரசின் அறிவுறுத்தலை அத்தனை சிறப்பாக பின்பற்றுவது நெகிழச் செய்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories