Corona Virus

“கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை” - சோதனைக்குத் தயாராகும் ICMR ! #Covid19

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தும் சோதனை நடைமுறைகள் இறுதி நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தும் சோதனை நடைமுறைகள் இறுதி நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைப் போல சமூகப் பரவல் நிலைக்கு இன்னும் வரவில்லை எனும் செய்தி ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

இந்தியாவில் தற்போது 5,865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 169 பேர் பலியாகியுள்ளனர். 473 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல்படி 1,30,792 நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,44,919 சாம்பிள்கள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அதிகாரி, மருத்துவர் மனோஜ் முர்ஹேகர் கூறும்போது, “கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தும் சோதனைகளுக்கான நடைமுறைகள் இறுதி நிலையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

“கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை” - சோதனைக்குத் தயாராகும் ICMR ! #Covid19

மேலும், “இந்த பிளாஸ்மா சிகிச்சையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் ரத்த அணுக்களை கொரோனா தொற்று நோயாளிகளின் உடலில் செலுத்தி, குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு ஆற்றல் மூலம் கொரோனாவை அழிக்கும் சிகிச்சை.

பிளாஸ்மா சிகிச்சை ஆபத்தான கட்டத்தில் வென்ட்டிலேட்டரில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும். இது நல்ல பலன்களை அளிப்பதாக அயல்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories