Corona Virus

Break The Chain: “புலம்பெயர்ந்த கேரளத்தினருக்காக ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை” - பினராயி அரசு அறிவிப்பு!

வெளிநாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்தினருக்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் முதல் முறையாக சீனாவில் இருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 2 பேருக்கு வந்ததால் உடனடியாக விழித்துக் கொண்ட கேரள அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இதுகாறும் கையாண்டு வருகிறது.

நிஃபா வைரஸ் போன்ற பேரிடர்கள் கொடுத்த பாடங்களே கொரோனா விவகாரத்தில் கேரள அரசு முனைப்பாகவும், விழிப்புடனும் செயல்படுவதற்கு வித்திட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் கேரள மாநிலம் 9வது இடத்தில் உள்ளது.

345 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதில் 259 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளது சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளச் செய்கிறது.

Break The Chain: “புலம்பெயர்ந்த கேரளத்தினருக்காக ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை” - பினராயி அரசு அறிவிப்பு!

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 474 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதில் 749 பேர் மருத்துவமனையில் நேரடி கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காசர்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா மருத்துவமனை செயல்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருவதை அறிய முடிகிறது.

ஆகையால், வெளிநாடுகளில் உள்ள கேரளத்தினருக்காக ஆன்லைன் மூலம் 5 மருத்துவ உதவி மையங்கள் (Helo Desk) திறக்கப்படுகின்றன. அதன் மூலம் இங்குள்ள மருத்துவர்கள் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவர். இந்த ஆலோசனை இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Break The Chain: “புலம்பெயர்ந்த கேரளத்தினருக்காக ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை” - பினராயி அரசு அறிவிப்பு!

இதனையடுத்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட அனைத்து வழிகளையும் பின்பற்றி வருகிறோம். ஆயுர்வேத மருத்துவத்தையும் பயன்படுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களிடம் இருந்து குரங்குகளுக்கும் பரவுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். தற்காலிகமாக குரங்குகளுக்கு உணவுகள் ஏதும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் உபயோகிக்கும் மாஸ்க்குகள் மற்றும் கையுறைகளிலும் வைரஸ் இருக்க வாய்ப்புள்ளதால் பொது இடங்களில் வீசிச் செல்லக்கூடாது. பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளதால், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்ட முதல்வர் பினராயி விஜயன், ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதில் அதிக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories