Corona Virus

“அம்மா... வீட்டுக்கு போகலாம்.. வா!” : மருத்துவமனை எதிரில் நடந்த மனதை உருக வைக்கும் சம்பவம்! #COVID19

கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக வேலை பார்க்கும் தனது தாயை வீட்டிற்கு அழைக்கும் 3 வயது குழந்தையின் மனதை உருக வைக்கும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp

கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வீட்டில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக வேலை பார்க்கும் தனது தாயை 3 வயது குழந்தை வீட்டிற்கு அழைக்கும் உருக்கமான சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (வயது 31). இவருக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். சுனந்தா பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சுனந்தா, தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார்.

இதனால் அவர் கடந்த 15 நாட்களாக வீட்டுக்குச் செல்லவில்லை. நீண்ட நாட்களாக தாயை பார்க்காமல் சுனந்தாவின் குழந்தை ஐஸ்வர்யா பரிதவித்து வருகிறது. அந்தக் குழந்தை தினமும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் கூறி கதறி அழுது வந்த நிலையில் நேற்று, ஐஸ்வர்யாவை அவளுடைய தந்தை, தனது மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

“அம்மா... வீட்டுக்கு போகலாம்.. வா!” : மருத்துவமனை எதிரில் நடந்த மனதை உருக வைக்கும் சம்பவம்! #COVID19

இதுகுறித்து சுனந்தாவுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். சுனந்தா, கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருவதால், தூரத்தில் நின்றபடி தாயை தனது குழந்தைக்கு அவர் காட்டியுள்ளார். சுனந்தாவை பார்த்ததும், குழந்தை ஐஸ்வர்யா, ‘அம்மா.. வீட்டிற்கு போகலாம்... வாம்மா’ என்று கதறி அழுதுள்ளார். தனது குழந்தை அழுவதைப் பார்த்தும், நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தையைப் பார்த்தும் தன்னால் அவளைத் தூக்கி கொஞ்ச முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சுனந்தாவும் கண்ணீர் விட்டு அழுதார்.

மனதை உருக வைக்கும் இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தையையும், வீட்டையும் விட்டு பிரிந்து சுனந்தா கொரோனா வார்டில் தொடர்ந்து பணியாற்றி வருவதை பலர் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories