Corona Virus

Corona: “மருத்துவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்குக” : பிரதமரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

கொரோனா ஊரடங்கால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கவேண்டும் என டி.ஆர்.பாலு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற இரு அவைகளின் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக தி.மு.க நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வேளையில் தடுப்பு நடவடிக்கையாக அடுத்த கட்ட நகர்வு குறித்தும் தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றியும் பிரதமரிடம் முன்வைத்தார்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விவரித்தார் டி.ஆர்.பாலு.

அதில், அவர் கூறியதாவது, இந்தத் தருணத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தி.மு.க தலைவர் வலியுறுத்தியதை பிரதமரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

Corona: “மருத்துவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்குக” : பிரதமரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஈரான் நாட்டில் மீன் பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 300 பேரை உடனடியாக மீட்டு அழைத்து வேண்டும் என்றும் அவர்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முன் வைத்ததாக டி.ஆர்.பாலு கூறினார்.

கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சமயத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், தங்கள் உயிரை துச்சமாக மதித்து பணிபுரிந்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு மூன்று மடங்கு ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஊரடங்கு உத்தரவால் சிறுகுறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பணியை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. உயிர் காக்கும் முகக்கவச உடைகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பது பாதுகாப்பு அல்ல. அதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் நடுத்தர குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கொரோனா பாதிப்புக்காக தமிழகத்திற்கு அதிக நிதி வழங்க வேண்டும். சுமார் ஒரு லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்காமல் தனிமையிலேயே இருப்பதால் அவர்களின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories