Corona Virus

மருந்துக்காக மிரட்டும் அமெரிக்கா..1.7 லட்சம் முகக்கவச உடை கொடுத்த சீனா:இந்தியாவின் உண்மையான வில்லன் யார்?

நட்புறவுக் கொண்ட நாடு என கூறிக்கொண்டு இந்தியாவை அமெரிக்கா மிரட்டி வரும் வேளையில் சீன அரசு 1.7 லட்சம் முகக்கவச உடைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

மருந்துக்காக மிரட்டும் அமெரிக்கா..1.7 லட்சம் முகக்கவச உடை கொடுத்த சீனா:இந்தியாவின் உண்மையான வில்லன் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக நாடுகளை அடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ உரிய மருந்துகள் ஏதும் இல்லாத காரணத்தால் மலேரியா, நிமோனியா போன்ற காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்துகளை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் போதுமான அளவில் கையிருப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்த போது மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடை மத்திய அரசு நீக்கியதற்கு நன்றி கடனாக, இந்தியாவுக்கு 1.70 லட்சம் முகக்கவச உடைகளை சீனா அனுப்பி வைத்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

மருந்துக்காக மிரட்டும் அமெரிக்கா..1.7 லட்சம் முகக்கவச உடை கொடுத்த சீனா:இந்தியாவின் உண்மையான வில்லன் யார்?

அதுபோக, உள்நாட்டிலும் 20 ஆயிரம் முழு கவச உடைகள் வாங்கப்பட்டுள்ளன. முன்னதாக 3.87 லட்சம் முகக்கவச உடைகள் நாட்டில் உள்ளது என்றும், அதில் 2.94 லட்சம் உடைகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 80 லட்சம் முகக்கவச உடைகள் சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், நட்புறவுக் கொண்ட நாடு என கூறிக்கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்யவில்லையென்றால் இந்தியா பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அவ்வாறு அவர் மிரட்டியதை அடுத்து, மத்திய அரசோ மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவுக்கு மருந்துகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியாவை அமெரிக்கா மிரட்டி வரும் வேளையில் சீன அரசோ தாமாக முன்வந்து பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்துள்ளது. இதில் இருந்தே இந்தியாவின் உண்மையான வில்லன் யார் என உணர்ந்துக் கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories