Corona Virus

தென் கொரியாவில் குணமான 51 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று: உயிரணுக்களில் மறைந்திருந்து கொரோனா தாக்கும்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணம்டைந்த தென் கொரியர்கள் 51 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகெங்கும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களே அன்றாடம் செய்திகளாக மாறியுள்ளது. 13 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸை வென்று வீடு திரும்பியுள்ளனர்.

குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இப்படி இருக்கையில், தென் கொரியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தென் கொரியாவில் குணமான 51 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று: உயிரணுக்களில்  மறைந்திருந்து கொரோனா தாக்கும்?

டாயிகு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51 பேரும் குணமடைந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அவர்களை பரிசோதித்த போது, அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்து அனைவரையும் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 தென் கொரியாவில் குணமான 51 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று: உயிரணுக்களில்  மறைந்திருந்து கொரோனா தாக்கும்?

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் பால் ஹண்ட், “வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது. சிகிச்சைகளும், பரிசோதனைகளும் முழுமை பெறமாலோ, தவறாகவோ நடந்திருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், தென் கொரிய மருத்துவர்கள் கூறுகையில், மனித உடலில் உள்ள பல்லாயிரம் கோடி செல்களில் பிரிக்க முடியாத வகையில் கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டிருக்கலாம். ஆகையால், இது மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories