Corona Virus

“பிற நாடுகளுக்கு உதவத்தயார்; ஆனால் முதலில் இந்தியர்களின் உயிர் முக்கியம்” - ராகுல் காந்தி ட்வீட்!

அமெரிக்காவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை அனுப்ப தயார் என மத்திய அரசு தெரிவித்தது தொடர்பாக ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் முதன் முதலில் உருவான சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் என பல உலக நாடுகளையே அதீதமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் உயிரிழப்பு எண்ணிக்கையில் இத்தாலியும், பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவும் முன்னிலை வகிக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 3.6 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் உயிரிழப்பு மட்டும் 10,129 ஆக உள்ளது. இந்த இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என அமெரிக்க அதிபரே கூறியிருந்தார்.

இந்த இக்கட்டான சூழலில் வல்லரசு நாடான அமெரிக்காவிடம் போதிய மருத்துவ உபகரணம் இல்லாமலும், மருந்துக்கள் இல்லாமலும் அந்நாட்டு மருத்துவத்துறை மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றன.

“பிற நாடுகளுக்கு உதவத்தயார்; ஆனால் முதலில்  இந்தியர்களின் உயிர் முக்கியம்” - ராகுல் காந்தி ட்வீட்!

ஆகையால் அதிபர் ட்ரம்ப் தங்களது எதிரி நாடு என கூறிவந்த சீனாவிடமே தற்போது உதவிக்கேட்டுள்ளார். சீன அரசும் உடனே உதவிகளை வழங்கியுள்ளது. இன்னும் மருத்துவ உபகரணம் வழங்கும் பணியிலும் சீனா இறங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவிற்கு இந்தியா வழங்காவிடில் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.

இதனையடுத்து, மனிதாபிமானம் என்ற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்துகளை அனுப்பும் என மத்திய மோடி அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நட்புக்கு இடையே பதிலடி கொடுப்பது நல்லதல்ல. உலக நாடுகளின் தேவைக்கு இந்திய உதவட்டும்.

“பிற நாடுகளுக்கு உதவத்தயார்; ஆனால் முதலில்  இந்தியர்களின் உயிர் முக்கியம்” - ராகுல் காந்தி ட்வீட்!

ஆனால் முதலில் இந்தியர்களுக்கு தேவைக்கு அந்த மருந்துகள் போதுமானதாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் அனைத்து மூலைகளிலும் மருத்துவ உபகரணங்கள் சென்றடைய வேண்டிய கட்டாயமாகும் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories