Corona Virus

“அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று” : தி.மு.க எம்.எல்.ஏ நிதியை மறுக்கும் அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட கரூர் மாவட்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று” : தி.மு.க எம்.எல்.ஏ நிதியை மறுக்கும் அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களது தொகுதிக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகின்றனர். அதேப்போல் தி.மு.க இளைஞரணியும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் கொரோனாவை எதிர்க்க ஒன்றுக்கூடி போராடி வரும் வேளையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக செயல்படும் அ.தி.மு.க தனித்து தான் போக்கில் வேலைகளை செய்துவருகிறது.

அ.தி.மு.க வெற்றி பெற்றத்தொகுதிகளில் கூட மக்களுக்கு தேவையான உதவிகளை அம்மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா வழங்கிய கிருமிநாசினி சுரங்கப்பாதைக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1,03,71,878 ரூபாய் ஒதுக்கியுள்ளார். அவ்வாறு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்துள்ளது. அரசின் இந்த அணுகுமறைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும்!” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories