Corona Virus

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவப் பணிக்கு திரும்பிய அயர்லாந்து பிரதமர்! #COVID19 

கொரோனா நெருக்கடி காரணமாக அயர்லாந்து நாட்டு பிரதமர் லியோ வரட்கர் தன்னை மீண்டும் மருத்துவராக பதிவு செய்துள்ளார் என அவரது அரசு அலுவலக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவப் பணிக்கு திரும்பிய அயர்லாந்து பிரதமர்! #COVID19 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள 11 லட்சத்துக்கும் மேலானோரில் 69,522 பேர் உயிரிழந்திருந்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம் பேரை நெருங்கியுள்ளது. மேலும் சிகிச்சையில் உள்ள சுமார் 9 லட்சத்துக்கும் மேலானோரும் விரைவில் உடல்நலம் தேருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பெருமளவில் முயற்சித்து வருகின்றன. அப்படி இருக்கையில், அயர்லாந்து நாட்டின் பிரதமராக உள்ள லியோ வரட்கர் கொரோனாவுடன் போராடும் மக்களுக்காக தன்னுடைய மருத்துவ பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவப் பணிக்கு திரும்பிய அயர்லாந்து பிரதமர்! #COVID19 

இதுவரை அயர்லாந்து நாட்டில் 4,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 25 பேர் மட்டுமே குணமாகியுள்ள நிலையில் 158 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக தன்னுடைய மருத்துவ சேவையை லியோ வரட்கர் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

பொதுவாழ்வில் நுழைவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு வழை லியோ வரட்கர் மருத்துவராக பணியாற்றியுள்ளார். அரசியலில் அடியெடுத்து வைத்ததால் மருத்துவ பதிவில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய பெயரை நீக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம், அயர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சைமன் ஹாரிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சேவையாற்ற “நாட்டுக்கு நீங்கள் தேவை” என மருத்துவப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பை தொடங்கி வைத்தார்.

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவப் பணிக்கு திரும்பிய அயர்லாந்து பிரதமர்! #COVID19 

அதனையடுத்து, தானும் மருத்துவராக இருந்த காரணத்தால் பிரதமர் லியோ வரட்கர் தன்னை மார்ச் மாதம், மீண்டும் மருத்துவப் பணியில் இணைத்துக்கொண்டார். நாட்டின் சுகாதார சேவை நிர்வாகியாக (Health Service Executive-HSE) வாரத்திற்கு ஒரு அமர்வு என வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனைகளை வழங்குகிறார்.

லியோ வரட்கர் மருத்துவ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை மருத்துவராகவும், தாய் செவிலியராகவும் பணியாற்றியவர்கள். அதேபோல, அவரது மனைவி, சகோதரிகள் மற்றும் சகோதரிகளின் கணவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியாற்றியும் வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories