Corona Virus

“தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி - ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு” - பீலா ராஜேஷ் தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571-லிருந்து 621-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தீவிரமடைந்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571 ஆக இருந்தது. இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

அப்போது அவர் தெரிவித்ததாவது :

“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை - 91,851. அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை - 205. 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை - 19,060.

நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சைக்கு முன்வந்தால்தான் நோயை குணப்படுத்த முடியும். கொரோனா தொற்று உள்ளவர்களை மற்றவர்கள் வெறுக்க வேண்டாம்.

“தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி - ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு” - பீலா ராஜேஷ் தகவல்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் இன்று காலை உயிரிழந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் பலியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

உயிரிழந்த பெண் சென்னையிலிருந்து திருச்சிக்கு ரயில் பயணம் செய்தவர். இவரது உயிரிழப்பு மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories