Corona Virus

30 நிமிடத்தில் கொரோனா முடிவு.. ‘RAPID’ வேகத்தில் செல்லும் கேரளா... ஆயத்தமாகுமா தமிழகம்?

கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவை விரைவில் தெரிந்துகொள்வதற்கு இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் புது பரிசோதனை முறைக்கு அனுமதி அளித்துள்ளது.

30 நிமிடத்தில் கொரோனா முடிவு.. ‘RAPID’ வேகத்தில் செல்லும் கேரளா... ஆயத்தமாகுமா தமிழகம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை விரைவில் தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் புது பரிசோதனை முறையை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த PCR (polymerase chain reaction) பரிசோதனை முறை மூலம் கொரோனா முடிவுகள் வர 5 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆகையால், உடனடியாக பரிசோதனை முடிவுகளை அறியும் வகையில் புது முறையை உருவாக்க வேண்டும் என தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் வலியுறுத்தின.

30 நிமிடத்தில் கொரோனா முடிவு.. ‘RAPID’ வேகத்தில் செல்லும் கேரளா... ஆயத்தமாகுமா தமிழகம்?

இதனையடுத்து, Rapid Antibody Test என்ற புதிய முறையில் சோதனை நடத்தச் சொல்லி ஐ.சி.எம்.ஆர். அனுமதியளித்துள்ளது. அதன்படி, 15 முதல் 30 நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சீனாவிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட்டிங் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள ஐ.சி.எம்.ஆர், இந்த பரிசோதனை கருவி ஒன்று 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 நிமிடத்தில் கொரோனா முடிவு.. ‘RAPID’ வேகத்தில் செல்லும் கேரளா... ஆயத்தமாகுமா தமிழகம்?

இந்நிலையில், இந்த ரேபிட் பரிசோதனை மூலம் நல்ல முடிவுகள் தெரியவந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார். மேலும், 30 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளும் தெரிந்துவிடுவதால் சிகிச்சையும் விரைந்து அளிக்கப்படுகிறது என்றும், இதுவரையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தமிழகத்திலும் இந்த ரேபிட் பரிசோதனை முறையை செயல்படுத்தி, விரைவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories