Corona Virus

“இரவு 9 மணி விளக்கேற்றும் நிகழ்வு இதற்காகத்தான்” - பா.ஜ.கவின் குட்டு அம்பலம்; குமாரசாமி பளீர் ட்வீட்!

விளக்கேற்றுவதன் அறிவியல் மற்றும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என பிரதமர் மோடிக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

“இரவு 9 மணி விளக்கேற்றும் நிகழ்வு இதற்காகத்தான்” - பா.ஜ.கவின் குட்டு அம்பலம்; குமாரசாமி பளீர் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே கொரோனா பாதிப்பு தொடர்பாக இதுவரை 3 முறை உரையாற்றிருக்கிறார். அதில் ஒரு முறைகூட நாட்டு மக்களின் நலன் குறித்தும், ஏழை எளியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்தும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாறாக பாதுகாப்பு உபகரணமின்றி, கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கைத்தட்டி நன்றி செலுத்துங்கள் என அறிவித்தார்.

அதனையடுத்து கொரோனாவை விரட்ட ஒளியேற்றுவோம் எனக் கூறி, வீட்டில் இல்லாதவர்கள் செல்போன் டார்ச் லைட் மூலமும், வீட்டில் உள்ளவர்கள் அகல்விளக்கு மூலமும் ஒளியேற்றுங்கள் என அறிவியலுக்கும் புறம்பான ஒரு செயலை செய்ய சொல்லியிருக்கிறார்.

மோடியின் இந்த அறிவிப்பு நாட்டுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல மோடி எதை அறிவித்தாலும் அதில் உலக விஞ்ஞானம் ஒழிந்துள்ளது. முன்னோர்களின் மந்திரம் உள்ளது தந்திரம் உள்ளது என ஏகபோகமாக கதைகளை வாரி வழங்கிவருகின்றனர் இந்த மோடியின் விசுவாசிகள்.

அவரின் இந்த அறிவிப்பை ஆதரித்து சில அதிமேதாவிகள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மோடியின் புத்திசாலிசனத்தை உலக மக்களுக்கு புரியவைக்க முயல்கின்றனர். இது தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி பிரதமர் மோடியின் விளக்கும் ஏற்றும் அறிவிப்பை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கேற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா பிரதமர் மோடி? ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணியை தேர்வு செய்ததற்கு பா.ஜ.க தொடங்கப்பட்ட நாளை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

அப்படி இல்லையெனில், இந்த விளக்கேற்றுவதற்கான பின்னணி என்ன என்பதை அறிவியல் மற்றும் விஞ்ஞானப்பூர்வமாக பிரதமர் மோடியால் விளக்கமளிக்க முடியுமா என சவால் விடுகிறேன்.

உலகம் முழுவதும் பேரிடரை எதிர்கொண்டு வரும் வேளையில் தன்னுடைய கட்சியின் திட்டத்தை முன்னெடுப்பதா? இதனை கொஞ்சமாவது பிரதமர் மோடி உணர வேண்டாமா?

மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை இன்னும் அரசு அளிக்கவில்லை. ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு அர்த்தமற்ற செயல்களில் மக்களை ஈடுபடுத்துகிறார் பிரதமர் மோடி” என குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories