Corona Virus

“ஒரே வாரத்தில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு” : நாட்டில் தீவிரமாக பரவுகிறதா கொரோனா?

இந்தியாவில் கடந்த 3 நாட்களில் மட்டுமே 1,068 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தும் வரும் வேளையிலும் இந்தியாவிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது. இதுவரை 2,902 பேருக்கு வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், 2,650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 183 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 68 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கையை வெளியாகியுள்ளது. அதில், மத்திய சுகாதாரத்துறை கடந்த ஞாயிறு அன்று 931 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், 25 பேர் உயிரிழந்ததாகவும் கூறியிருந்தது.

 “ஒரே வாரத்தில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு” : நாட்டில் தீவிரமாக பரவுகிறதா கொரோனா?

இன்று (ஏப்ரல் 04) காலை 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கைப்படி கொரோனா தொற்று 2,902 ஆகவும், உயிரிழப்பு 68 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு வாரத்தில் 1,971 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி இரவு கணக்குப்படி கொரோனா தொற்று 1,834 ஆக இருந்தது. உயிரிழப்பு 41ஆக இருந்தது. அது இன்று 2,902 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, மூன்றே நாட்களில் 1,068 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே நேற்று வரை 69,245 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) கூறியுள்ளது. நேற்று மட்டும் 10,034 பேரிடம் சோதனை நடத்தியதில் 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.

 “ஒரே வாரத்தில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு” : நாட்டில் தீவிரமாக பரவுகிறதா கொரோனா?

இந்த கணக்குகள், கொரோனா தீவிரமாகப் பரவி வருவதையே காட்டுகின்றன. இதனால், மக்களிடையே பரவலான கொரோனா சோதனைகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று உயர்மட்ட மருத்துவக் குழு கூடி ஆலோசனை நடத்துகிறது.

அதன் பின்னர், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் பரவலான சோதனைகள் நடத்துவதற்கான ஒப்புதலையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வெளியிட உள்ளது.

banner

Related Stories

Related Stories