Corona Virus

“1 மில்லியன் மக்களுக்கு 29 சோதனைகள் போதுமா? டார்ச் ஏற்றினால் கொரோனா ஒழியுமா?” - ராகுல் தாக்கு! #Covid19

கை தட்டுவதாலும், டார்ச் அடிப்பதாலும் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி பிரதமர் மோடியைச் சாடியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களை கைதட்டச் சொல்வது மற்றும் டார்ச் ஏற்றுவது ஆகியவற்றால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில், நேற்று மக்களுக்கு காணொளிக் காட்சி மூலமாகச் செய்தி வெளியிட்ட பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து அகல் விளக்கு, டார்ச் அடித்து ஒளிரச் செய்யவேண்டும்” என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 29 பேரை மட்டுமே பரிசோதித்து வருவதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸை எதிர்க்க இந்தியாவில் போதுமான அளவிற்கு சோதனைகள் செய்யப்படவில்லை. மக்களை கைதட்டச் சொல்வது மற்றும் டார்ச் மூளம் ஒளியூட்டச் செய்வதால் மட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Latest Stories

Related Stories

Related Stories