Corona Virus

"கொரோனா பாதிப்பு சமூகப் பேரிடர் : இன்று புதிதாக 74 பேருக்கு தொற்று; ஒருவர் பலி” - பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கெனவே இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

 "கொரோனா பாதிப்பு சமூகப் பேரிடர் : இன்று புதிதாக 74 பேருக்கு தொற்று; ஒருவர் பலி” - பீலா ராஜேஷ்!

4,248 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதில் 3,356 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை - 90,543. கொரோனா பாதிப்பு என்பது சமூகப் பேரிடர்.”

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories