இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 1,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதேப்போல் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருகின்றது. அதேவேலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவித்து வருபவர்களுக்கு, ஆரவற்றவர்களுக்கும் பல்வேறு உதவிகளை அரசு சார்பிலும் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் செய்துவருகின்றனர்.
ஆனால், ஊரடங்கு காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள், மாடுகள் போன்ற வாயில்லா ஜீவன்களை பெரும்பாலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில், சென்னையில் உள்ள இளைஞர் ஒருவர் சாலைகளில் திரியும் 200-க்கும் மேற்பட்ட வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்துவருகின்றார்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மணிகண்டன் என்பவரே இந்த பணியை தொடந்து செய்து வருகிறார். காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு சிறுவயதில் இருந்தே வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனிடையே வேலைக்காக சென்னை வந்த மணிகண்டன் அலுவலகம் செல்லும் போது தனது சொந்த செலவில் சாலைகளில் உள்ள பிராணிகளுக்கு உணவு வாங்கி பசியை போக்கியுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு கொண்டுவந்ததால், தனது வீட்டிலேயே உணவு சமைத்துப்சென்னை மெரினா சாலையில் உள்ள நாய்களுக்கு, பறவைகளுக்கு உணவு அளித்துள்ளார்.
இவர் தினமும் பருப்பு சாதம், பெடிகிரி, பிஸ்கட் போன்றவற்ற உணவுகளை கொண்டுவந்து காகித தட்டில் வைத்து நாய்களுக்கு ருசியான உணவு வழங்கி வருகிறார். இவரின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து போலிஸாரின் அவரை பாராட்டி எதுவும் கேட்காமல் விட்டுவிடுகின்றனர்.
அதேப்போல் அவரின் நண்பர்களுக்கு அரிசி, பிஸ்கட் போன்றவற்றை வழங்கி உதவி செய்துவருகின்றனர். இவரின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.