Corona Virus

பரவும் கொரோனா: நிஜாமுதீனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்துக்கு குறிவைப்பு - சுகாதாரத் துறை கண்காணிப்பு!

பிப்ரவரி மாதம் நடந்த சிவராத்திரி விழாவில் பல்லாயிரக்கணக்கானோர்ர் பங்கேற்றதால் ஈஷா யோகா மையத்தை குறிவைத்துள்ளது சுகாதாரத்துறை.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை ஓரிரு நாட்களில் சாரை சாரையாக உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணமாக அமைந்திருப்பது டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 1 முதல் 15 வரையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியாக உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம் என நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்களும், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து என பல வெளிநாட்டினரும் பங்கேற்றிருக்கின்றனர்.

பரவும் கொரோனா: நிஜாமுதீனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்துக்கு குறிவைப்பு - சுகாதாரத் துறை கண்காணிப்பு!

கொரோனா பாதித்தவர்களை எவ்வித பரிசோதனையும் இன்றி நாட்டுக்குள் அனுமதித்ததாலேயே இவ்வளது பாதிப்பு எண்ணிக்கை உயர காரணமாக இருந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து டெல்லி சென்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சிக்கு சென்று வந்த 1131 பேரில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 616 பேரை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே, பலருக்கு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், டெல்லி மத நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரியில் ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் பங்கேற்றிருந்ததால் அவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பிருக்குமா என்ற சுகாதாரத்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தமிழகம் வந்த வெளிநாட்டினரையும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களையும் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் சிக்குவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories