Corona Virus

கொரோனாவில் இருந்து மீண்ட முதிய தம்பதி;  நாட்டுக்கே நம்பிக்கை அளித்த கேரளாவின் அசத்தல் சிகிச்சை!

கேரளாவில் 91 மற்றும் 88 வயது முதிய தம்பதி கொரோனாவை வென்று குணமடைந்திருப்பது நாட்டுக்கே நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட முதிய தம்பதி;  நாட்டுக்கே நம்பிக்கை அளித்த கேரளாவின் அசத்தல் சிகிச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸால் இதுவரை பல்லாயிரக்கணக்கான முதியவர்கள் உயிரிழந்தும், கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் கேரளாவில் 91 மற்றும் 88 வயது முதிய தம்பதி கொரோனாவை வென்று குணமடைந்திருப்பது நாட்டுக்கே நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. இதில் பெரும்பாலானோர் 40 மற்றும் 50 வயதுக்கும் மேலானாவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே கேரளா (234) மற்றும் மகாராஷ்டிரா (238) ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.

கொரோனாவில் இருந்து மீண்ட முதிய தம்பதி;  நாட்டுக்கே நம்பிக்கை அளித்த கேரளாவின் அசத்தல் சிகிச்சை!

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளதால் அம்மாநில அரசு தொற்று பாதிக்கப்பட்டவர்களை மிகவும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. இப்படி இருக்கையில், உலக அளவில் கொரோனாவுக்கு முதியவர்களே லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் பலியாகியும் உள்ளனர்.

ஆனால், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ் (91) மற்றும் மரியம்மா (88) தம்பதி கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்திருப்பது அம்மாநில மக்களுக்கும், நாட்டுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரம் மேற்குறிப்பிட்ட தம்பதியின் மகன் ஆபிரகாம் இத்தாலியில் இருந்து பத்தனம்திட்டாவுக்கு வந்திருக்கிறார். அவர் மூலம் அவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரவியிருந்தது. இதன் காரணமாக அனைவருமே கோட்டயம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சீரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஆபிரகாமும், அவரது மனைவியும் குணமாகி மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்தான் அவரது முதிய பெற்றோர் இருவரும் குணமாகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், “இந்த நிகழ்வு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ பணியாளர்களின் சேவைக்கும் அதேபோல, கேரள பொது சுகாதார அமைப்பின் வலிமைக்கும் கிடைத்த நற்சான்று. இதில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம்”

முன்னதாக, கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் தலா ஒருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories