Corona Virus

கொரோனா பீதி: தனியார் மருத்துவமனைகள் அரசு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளை அரசின் கீழ் இயங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 1352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 138 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், பலரது ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளிவராததால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கலாம் என கருதப்படுகிறது.

அதனடிப்படையில் ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அத்தியாவசிய பொருட்களை மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பீதி: தனியார் மருத்துவமனைகள் அரசு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாநிலத்தின் தலைநகர்களில் ஒன்றான விசாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இதன்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக தயாராக இருக்கும் படி ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், அடுத்தபடியாக, ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளையும் அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

தொற்றுநோய் தடுப்புச் சட்டம் 1,897 மற்றும் ஆந்திரா தொற்றுநோய் கோவிட் 19 2020 விதிப்படி அதிகாரங்களை பயன்படுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்துள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய தண்டனைச் சட்டம் 188ன் படி, இந்த உத்தரவை எதிர்க்கும் ஒவ்வொன்றையும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பீதி: தனியார் மருத்துவமனைகள் அரசு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பணியாற்ற வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் உள்ளா படுக்கைகள், வார்டுகள், ஐசியூ, வெண்டிலேட்டர்கள், சோதனை ஆய்வகங்கள், மருந்தககங்கள், சவக்கிடங்குகள், உபகரணங்கள், மனிதவளம் என அனைத்து உட்கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைத்திருந்து அரசின் தேவைக்கு ஏற்ப கிடைக்கப்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிக்கையை நேற்று (மார்ச் 30) நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தின் போது வெளியிட்டார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது இந்த முடிவை போலவே அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டால் இந்தியாவில் எளிதாக கொரோனா சிகிச்சை மேற்கொண்டு சமூக அளவில் பரவாமல் காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories