Corona Virus

சமூக பரவலை எட்டியதா கொரோனா? நீட்டிக்கப்படுமா லாக் டவுன்? - மத்திய அரசு விளக்கம்!

மக்கள் ஒத்துழைக்காதவரை இந்தியாவில் கொரோனா சமூக அளவில் பரவாது என சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.

சமூக பரவலை எட்டியதா கொரோனா? நீட்டிக்கப்படுமா லாக் டவுன்? - மத்திய அரசு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் பல்வேறு நாடுகளை போல இந்தியாவையும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் நோயால் இதுவரை 1100க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 102 பேர் குணமடைந்திருந்தாலும் 32 பேர் உயிரிழந்திருப்பது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளவர்களால் மட்டுமே நிகழ்வதால் அது சமூக பரவலாக உருமாறிவிடக் கூடாது என்பதாக 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக பரவலை எட்டியதா கொரோனா? நீட்டிக்கப்படுமா லாக் டவுன்? - மத்திய அரசு விளக்கம்!

இருப்பினும், பொது வெளியில் கொரோனாவின் தாக்கம் சமூக அளவில் பரவியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 30) செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், "இந்தியாவில் கொரோனாவின் பரவல் local transmission அதாவது வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே உள்ளது. 3-ம் கட்டமான சமூக அளவில் பரவில்லை." என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லாமல் தடுக்கும் வழி மக்களிடம் மட்டுமே உள்ளது. அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றி வீட்டில் தனிமையில் இருந்தால் சமூக பரவல் தடுக்கப்படும் என லவ் அகர்வால் கூறினார். மேலும், கொரோனா பரவல் சமூக அளவின் தொடக்க நிலையில் உள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மைத் தன்மையில்லை என்றார்.

சமூக பரவலை எட்டியதா கொரோனா? நீட்டிக்கப்படுமா லாக் டவுன்? - மத்திய அரசு விளக்கம்!

தொடர்ந்து பேசிய அவர், "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 11 அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் இதனால் பதட்டமடைய தேவையில்லை. ஊரடங்கை பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பே தேவை" என லவ் அகர்வால் கூறியுள்ளார்.

இதேபோல செய்தியாளர்களை சந்தித்த உள்துறை இணைச் செயலாளர் புன்யா ஸ்ரீவாஸ்தவா " வெளி மாநில தொழிலாளர்களிடமும், மாணவர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்கக் கூடாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்." எனக் கூறினார்.

மேலும், 21 நாட்கள் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகவும் வந்த செய்தி வெளியானதை அடுத்து, அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என மத்திய அரசு மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories