கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 50 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைகள் மட்டுமே வைத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்திவிட முடியாது எனக் கூறி, தி.மு.க. நாடாளுமன்ற சட்டமன்ற மற்றும் கட்சி நிர்வாகிகளும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, சென்னை சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், கொரோனா நோயாளிகளுக்காக சோழிங்கநலூரில் உள்ள தனக்கு சொந்தமான நட்சத்திர விடுதியை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளார்.
29 தனித்தனி குளிர்சாதன வசதி மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட அறைகள் உள்ள அரவிந்தர் ரெசிடென்ஸியை பெருநகர மாநகராட்சி வசம் வழங்கியுள்ளாதாக தி.மு.க எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இவரது இந்த முயற்சிக்கு மக்களிடையே வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
முன்னதாக, கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், 25 லிட்டர் கிருமி நாசினி மற்றும் 1100 மாஸ்குகளையும் பெருநகர மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.