Corona Virus

#Corona: கன்னியாகுமரியில் அடுத்தடுத்த மரணத்திற்கு காரணம் என்ன? - அரசிடம் விளக்கம் கேட்கும் மு.க.ஸ்டாலின்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தார்களா என அரசு விளக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 3,600 பேரைக் கண்டறிந்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மேலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Corona: கன்னியாகுமரியில் அடுத்தடுத்த மரணத்திற்கு காரணம் என்ன? - அரசிடம் விளக்கம் கேட்கும் மு.க.ஸ்டாலின்!

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வெளிவராத நிலையில், அவர்களின் இறப்புக்கு மருத்துவமனை தரப்பில் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால், இறப்பு குறித்து அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

#Corona: கன்னியாகுமரியில் அடுத்தடுத்த மரணத்திற்கு காரணம் என்ன? - அரசிடம் விளக்கம் கேட்கும் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசு அதுகுறித்து தெளிவான தகவல் தரவில்லை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என்றும்; இதுபோன்ற முழுமையற்ற தகவல்கள் மக்களை மேலும், மேலும் அச்சப்பட வைக்கும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த தலைமைச் செயலாளர், “சுகாதாரத் துறைச் செயலாளர் மூலம் விரைவில் இதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories