Corona Virus

''இத்தாலியில் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்'' - மருத்துவ உலகின் அதிசயம்! #Corona

கொரோனா வைரஸால் கடும் அழிவைச் சந்தித்துள்ள இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தடுமாறி வருகின்றன. உலக அளவில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்களே பெரும்பாலும் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இத்தாலியை ஆட்டிப்படைத்து வருகிறது. கடும் மனிதப் பேரழிவைச் சந்தித்துள்ள இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

ரிமினி பகுதியைச் சேர்ந்த இந்த முதியவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கொரோனாவுக்கு மருந்துகள் இல்லாத நிலையில், மாற்று மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மூலமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அவரது உடல்நிலை சீரானது. இதனையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், 101 வயது முதியவர் குணமடைந்திருப்பது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவர் குணமடைந்திருப்பதன் மூலம் அனைவரின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப் பார்த்ததாக ரிமினி நகர துணை மேயர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து 101 வயது முதியவர் குணமடைந்து இருப்பது மருத்துவ உலகின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories