Corona Virus

#CoronaAlert : கொரோனா விழிப்புணர்வுக்காக வைரமுத்து வரிகளில் பாடிய எஸ்.பி.பி! (Video)

கொரோனா விழிப்புணர்வுப் பாடலை வைரமுத்து வரிகளில் பாடியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

#CoronaAlert : கொரோனா விழிப்புணர்வுக்காக வைரமுத்து வரிகளில் பாடிய எஸ்.பி.பி! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸால் உலக நாடுகள் மிகுந்த இழப்பைச் சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோரைத் தாக்கியிருக்கும் கொரோனா தொற்று காரணமாக 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் தனது தீவிரத்தைக் காட்டி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் வெகுவாக அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14 வரை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தவிர வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றைப் பாடி, அதனைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அந்தக் காணொளியில், “கொரோனாவால் அனைவரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மோசமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயனுள்ளதாகச் செலவிடுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி.பி.

மேலும், தமிழில் கொரோனா விழிப்புணர்வுக்காக எஸ்.பி.பி பாடியிருக்கும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் பாடலை ரசிகர்கள் பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories