Corona Virus

"அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிய வேண்டாம்” - திருப்பூர் கலெக்டரின் அசத்தல் யோசனை! #CoronaAlert

மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஒரு புது யோசனையை செயல்படுத்தியுள்ளார்.

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக தவிர எவரும் வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், பால் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வரும் நிலை உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பித்தும் பலன் இல்லாத நிலை ஏற்படுகிறது.

"அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிய வேண்டாம்” - திருப்பூர் கலெக்டரின் அசத்தல் யோசனை! #CoronaAlert

அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக மளிகைக் கடை, காய்கறி கடைகளில் அலைமோதுவதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உருவாகிறது. இது அரசையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஒரு புது யோசனையை செயல்படுத்தியுள்ளார்.

அதன்படி, திருப்பூர் பகுதியில் இயங்கும் மளிகைக் கடைகளின் பெயர்களுடன் அந்தக் கடையின் போன் நம்பரும் வெளியிட்டு, போன் மூலம் ஆர்டர் செய்தால் உங்கள் பொருட்கள் பேக்கிங் செய்து வைக்கப்படும் என்றும், தயாரானதும் நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தால் மக்கள் கொரோனா அச்சத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இத்திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களுக்கும் செயல்படுத்தினார் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன். இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories