Corona Virus

Corona : தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - திருவள்ளூர் எஸ்.பியின் அசத்தல் முயற்சி!

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக பிரத்யேக செயலியை உருவாக்கிய திருவள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கே பெரும்பாலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேசமயத்தில், அவர்களுடன் பழகியவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அது கொரோனா அறிகுறி இல்லாதவர்களாக இருந்தாலும் இந்த தனிமைப்படுத்தல் அவசியமானதாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Corona : தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - திருவள்ளூர் எஸ்.பியின் அசத்தல் முயற்சி!

இருப்பினும், சிலர் வீட்டை விட்டு வெளியே வருவது, மருத்துவமனையில் இருந்து தப்பித்து வெளியே சென்று வருவது போன்றவை தொடர்கதையாகி வருகிறது. இதனால் சுகாதாரத் துறை தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் என்பவர் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்தியுள்ளார்.

எஸ்.பி.அரவிந்தன்
எஸ்.பி.அரவிந்தன்
நன்றி: விகடன்

கணினி பொறியியல் படித்துள்ள எஸ்.பி. அரவிந்தனும், நோஷன் டேக் டெக்னாலஜிஸின் தலைமைச் செயல் அலுவலருமான விஜய் தேசிகனும் இணைந்து CO BUDDY எனும் செயலியை இரண்டே நாட்களில் உருவாக்கியுள்ளனர். இந்த செயலியின் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சுலபமாக கண்காணிக்க முடியும் என்று கூறுகிறார் விஜய் தேசிகன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 123 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை தினந்தோறும் கண்காணிக்க இந்த செயலி உதவும். இந்த செயலியை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளோம்.

Corona : தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - திருவள்ளூர் எஸ்.பியின் அசத்தல் முயற்சி!
நன்றி: விகடன்

ஜி.பி.எஸ் வசதியின் மூலம், அவர்கள் எங்கு சென்றாலும் Co Buddyயின் மூலம் கண்காணிக்க முடியும் என்கிறார் எஸ்.பி அரவிந்தன். தனிமைப்படுத்தவர்களின் செல்போன்களுக்கு ரேண்டமாக அலர்ட் வரும் வசதி இந்தச் செயலியில் உள்ளது. உடனடியாக அவர்கள் செயலி மூலம் தங்களின் செல்ஃபியை அனுப்ப வேண்டும். இல்லையெனில் அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்குத் தகவல் வந்துவிடும். இதன் மூலம் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு வெளியில் சென்றால் கண்டறிந்துவிடலாம்.

இந்த செயலி போலிஸாருக்கு மட்டுமல்லாமல் சுகாதாரத்துறையினருக்ரும் தெரியப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் எஸ்.பி அரவிந்தன்.

Corona : தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - திருவள்ளூர் எஸ்.பியின் அசத்தல் முயற்சி!
நன்றி: விகடன்

திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த செயலி முயற்சியை மேற்கொண்ட எஸ்.பி. அரவிந்தனை காவல்துறையினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories