Corona Virus

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்காக குருத்வாராவையே சமையல் கூடமாக்கிய சீக்கியர்கள்! (Video)

நியூயார்க்கில் தினமும் கொரோனா ஊரடங்கால் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது ஒருங்கிணைந்த சீக்கியர்கள் அமைப்பு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள மக்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சீக்கியர்கள் மத நல்லிணக்கத்தோடு தொடர்ந்து தொண்டு புரிந்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சீக்கியர்கள் என்ற அமைப்பின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 68 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 1,032 பேர் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் மட்டுமே 33,013 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆகையால், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கான உணவுத் தேவைக்காக நியூயார்க் நகர மேயர் பில் டி பேசியோ அந்நாட்டில் உள்ள சீக்கியர்களை அணுகி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து, நியூயார்க்கில் உள்ள குருத்வாராவை சமையல் கூடங்களாக மாற்றி நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்.

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்காக குருத்வாராவையே சமையல் கூடமாக்கிய சீக்கியர்கள்! (Video)

இந்த உணவு தயாரிப்பின் போது சமூக இடைவெளியை முறையாகக் கடைபிடித்து, கையுறை, முகக் கவசங்களை அணிந்தபடியே செய்து வருகின்றனர். சத்துள்ள காய்கறிகள், பருப்பு வகைகள் இடம்பெற்ற சைவ சாப்பாடு பொட்டலங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

இந்த சேவைகளை அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சீக்கியர்கள் செய்து வருகின்றனர். அதுபோல, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா என பல்வேறு நாடுகளிலும் இந்தப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories