Corona Virus

கொரோனா அச்சத்தால் 2 மாதங்களாக சுய ஊரடங்கை கடைபிடித்து வரும் கிராமம் - சுவாரஸ்ய தகவல்! #CoronaLockdown

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடக எல்லையில் உள்ள கிராமத்தினர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 நள்ளிரவு முதல் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால், கர்நாடக-ஆந்திர எல்லையோரத்தில் உள்ள கிராமத்தினர் கடந்த 2 மாதங்களாக ஒட்டுமொத்த கிராமத்தையும் முடக்கி சுய ஊரடங்கைக் கடைபிடித்து வருகின்றனர்.

கோலார் மாவட்டத்தில் உள்ள எம்.கோலஹல்லி என்ற கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தால் 2 மாதங்களாக சுய ஊரடங்கை கடைபிடித்து வரும் கிராமம் - சுவாரஸ்ய தகவல்! #CoronaLockdown

அதன்படி, கோலஹல்லி கிராமத்தில் இருந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவரும் வெளியே போகவும் கூடாது. வெளியில் இருந்து எவரும் ஊருக்குள் வரவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கிராம எல்லைக்கு என தனி சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்கு என குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சத்தால் 2 மாதங்களாக சுய ஊரடங்கை கடைபிடித்து வரும் கிராமம் - சுவாரஸ்ய தகவல்! #CoronaLockdown

அவர்களில் 4 குழுக்கள் மட்டும் சுகாதாரம் மற்றும் தொலைத்தொடர்புக்கு பொறுப்பேற்று அதனடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கோலஹல்லியைச் சேர்ந்தவர்கள் பிற ஊர்களிலோ நகர்ப்புறங்களிலோ தங்கியிருந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வரச்செய்துள்ளனர்.

இதுபோன்று கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை 2 மாதங்களாக அக்கிராம மக்கள் கடைபிடித்து வருவது தாலுகா அலுவலர்களையே ஆச்சர்யமடைய வைத்துள்ளது. மேலும், இதனையறிந்த அதிகாரிகள் எம்.கோலஹல்லிக்கு சென்று ஆய்வும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories