Corona Virus

CoronaAlert: ICMR பரிந்துரைத்த மருந்து கொரோனா வைரஸை கொல்லுமா? எச்சரிக்கை பதிவு!

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரைத்த மருந்தை உட்கொள்வதால் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துவிட முடியுமா என்பதை விளக்கும் பதிவு.

CoronaAlert: ICMR பரிந்துரைத்த மருந்து கொரோனா வைரஸை கொல்லுமா? எச்சரிக்கை பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை உபயோகிக்கச் சொல்லி பரிந்துரை செய்தது.

இதனால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றனர். மேலும், இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா தாக்கினாலும் குணமாகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள்.

CoronaAlert: ICMR பரிந்துரைத்த மருந்து கொரோனா வைரஸை கொல்லுமா? எச்சரிக்கை பதிவு!

இதுமட்டுமல்லாமல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் மருந்தகங்களில் சுயமாக சென்று இந்த மருந்தை வாங்கியும் வைத்துக்கொள்ள முற்படுகிறார்கள். இந்த மருந்தை வாங்குவதன் மூலம் பற்றாக்குறையே ஏற்படுமேயன்றி, வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு விடமுடியாது என மருத்துவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கும், மருத்துவ பணியாளர்களுக்குமே வழங்க இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. நோய்த்தாக்கம் ஏற்படாதவர்கள் இதனை உட்கொள்ளவேண்டும் என பரிந்துரைக்கவில்லை.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே மருந்து சமூக பரவலை ஏற்படுத்தாமல் இருப்பது மட்டுமேயாகும். மாஸ்க், சேனிடைசர் போன்று இந்த மருந்தையும் வாங்கிக் குவித்து, மருத்துவர்கள் ஆலோசனையில்லாமல் உட்கொண்டால் பின்விளைவுகளே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்,

banner

Related Stories

Related Stories