Corona Virus

"ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் 1 ஆண்டு சிறை” - புதுச்சேரி முதல்வர் கடும் எச்சரிக்கை!

புதுச்சேரி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு வருட சிறை தண்டனை என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை.

"ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் 1 ஆண்டு சிறை” - புதுச்சேரி முதல்வர் கடும் எச்சரிக்கை!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள், காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அளிக்கப்படும். மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை இராணுவப் படை உதவி கோரப்படும். மேலும் நாளை முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை மருந்தகங்களைத் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories