Corona Virus

#CoronaAlert: நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு - பிரதமர் மோடி அறிவிப்பு!

#CoronaAlert: நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு - பிரதமர் மோடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Mohan Prabhaharan
Updated on

கொரோனா வைரஸ் நோய் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டு மக்களிடம் மோடி இரண்டாவது முறையாக இன்று (மார்ச் 24) உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு.

வணக்கம் நான் மீண்டும் ஒரு முறை உங்களிடம் கொரோனா வைரஸ் குறித்து பேச வந்து இருக்கிறேன்.

கடந்த மார்ச் 22ம் தேதி நாம் நடத்திய மக்கள் சுய ஊரடங்கு மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்கிறது. ஒரு இந்திய குடிமகனாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற வைத்துள்ளோம். அதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

உலகநாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலால் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எப்படி சிறப்பான முறைகளைக் கையாண்டாலும் இந்த வைரஸ் மிகவும் மோசமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வை வைத்து பார்க்கையில் Social Distancing மட்டுமே இந்த வைரஸை ஒழிப்பதற்கு மிகச்சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க இந்த முறையை நாம் மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

சிலர் இதை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகிறார்கள். ஆனால், கள நிலவரம் அப்படியில்லை. ஒவ்வொரு குடிமகனும், தந்தை, தாய், மகன், நண்பன் என அனைவரும் இதை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஏன் இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நானுமே கடைபிடித்தாக வேண்டும். இதை கடைபிடிக்கத் தவறினால், இதுபோன்ற மோசமான நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.

இதுகுறித்து வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்து என்ன , இன்று இரவு 12 மணி முதல் இந்த தேசம் முழுமையான தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாட்டில் அனைவரும் தங்களது வீட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், மாவட்டமும், கிராமமும் முடக்கப்படுகிறது. இது சுய ஊரடங்கு உத்தரவை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனாவை எதிர்த்துப் போராட இது மிகவும் முக்கியம். இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் இருந்தாலும், நாட்டின் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது மிகவும் முக்கியமான நடவடிக்கை.

அரசு இயந்திரங்கள் அனைத்தும் இதை முறையாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு இது அமலில் இருக்கும். இது பல்வேறு வல்லுநர்களின் திட்டங்களில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கும் முடிவு. 21 தினங்களில் இந்த நாடும், மக்களின் வீடும் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. அப்படி இல்லையென்றால், பல குடும்பங்கள் இழப்பை சந்திக்கும் என்பதை நினைவு படுத்துகிறேன். தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியனும் தங்களது வீட்டை சுற்றி லஷ்மண ரேகை வரைந்துகொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் மிகப்பெரிய உயிர்கொல்லியை நீங்கள் உங்கள் வீட்டு வரவேற்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் யாரை சந்தித்தாலும், இதை நினைவுபடுத்துங்கள்.

ஒருவருக்கு கொரோனா வந்தால், அது வெளிப்படையாக உணர்த்த பல தினங்களை எடுத்துக் கொள்ளும். அதுவரை பலரின் உடலுக்கும் அது பரவும். உங்களுக்கே தெரியாமல் அது நடக்கும். இது நடந்தால், காட்டுத்தீ போல இந்த வைரஸ் நாட்டில் பரவும். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டிபடி, இந்த வைரஸ் 67 நாட்களில் 1 லட்சம் பேருக்கு பரவியது. ஆனால், அடுத்த ஒரு லட்சம் பேருக்கும் வெறும் 11 நாட்களில் பரவியது. அடுத்த 4 தினங்களில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் ஆகியது. யோசித்துப் பாருங்கள் எத்தனை வேகமாக சீனா, அமெரிக்கா, ப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த நோய் பரவி இருக்கிறது என.

இத்தாலி, அமெரிக்கா நாடுகளின் மருத்துவ சேவைகள் இந்த உலகின் மிக நவீனமானது என்று சொல்லப்படுகிறது எனினும் அவர்களாலேயே இந்த நோய் பரவலை சமாளிக்க முடியவில்லை என்றால் இந்த வைரஸ் எத்தனை கொடூரமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த நாட்டின் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களோ அங்கு மட்டுமே இந்த நோய் கட்டுப்பட்டு இருக்கிறது. அந்த குடிமக்கள் அரசின் வழிகாட்டுதலை மிகவும் மதித்து பின்பற்றுகிறார்கள். அதை போல நாமும் இதை மிக மிக சரியாகப் பின்பற்ற வேண்டும்.

எத்தனை மிக முக்கியமான பிரச்னையாக இருந்தாலும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிருங்கள். என்ன நடந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். இந்தியாவின் இந்த நடவடிக்கை இனி வரும் தினங்களில் இந்த நோய் பரவாய் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். மக்கள் பொறுமையைக் கையாளுங்கள். வாழ்வென்பது இருந்தால், நிச்சயம் நம்பிக்கை என்பது இருக்கும்.

இதை எத்தனை தீவிரமாக கடைபிடிக்கிறோமோ அத்தனை தீவிரமாக இந்த வைரஸை ஒழிக்க முடியும். நமக்காக களத்தில் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என இரவு பகல் பாராமல் போராடுபவர்களை நினைவில் கொள்ளுங்கள். நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிராத்தியுங்கள்.

#CoronaAlert: நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு - பிரதமர் மோடி அறிவிப்பு!

நமக்காக 24 மணி நேரமும் உழைக்கும் ஊடக நண்பர்களையும் , காவல்துறையினரையும் நினைவில் கொள்ளுங்கள். தங்களது வீடுகளை மறந்து, குடும்பத்தை மறந்து களத்தில் நிற்கிறார்கள். மத்திய அரசும் , மாநில அரசுகளும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இயங்கி வருகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எதற்கும் பதற்றப்பட வேண்டாம். உங்களுக்காக உழைக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன் வந்திருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து இந்த வைரஸை விரட்டுவோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 15000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவத் தேவைகள், ஆக்ஸிஜன் முகமூடிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சுகாதாரம் மட்டுமே முதன்மையான நடவடிக்கை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இந்த நோயைக் கட்டுப்படுத்த அரசுடன் கைகோர்த்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. மக்கள் அதை நம்ப வேண்டாம். தேவையில்லாத பயணங்களில் ஈடுபடவேண்டாம். மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். மக்கள் அனைவரும் அரசின் இந்த விதிமுறைகளை கேட்டு கட்டுப்பட வேண்டும். அடுத்த 21 நாட்கள் நமது நாட்டை இந்த மோசமான சூழலில் இருந்து மீட்க ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும்.

இவ்வாறு மோடி தனது உரையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories