Corona Virus

“5 ரூபாய் மாஸ்க் ரூ.30க்கு விற்பனை” : அப்பல்லோ மருந்தகத்துக்கு சீல் - திருப்பத்தூரில் அதிரடி!

திருப்பத்தூரில் உள்ள அப்பல்லோ மருந்தகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்களை அவசரகதியில் வாங்கி குவித்து வருகின்றனர்.

அதேபோல, வைரஸ் தொற்று இல்லாதவர்களை விட நோய் பாதித்துவிடுமோ என்ற மனநிலையில், வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்லாதவர்களும், நோய்க்கான அறிகுறியில்லாதவர்களும் கிருமி நாசினி, முகக் கவசங்களை வாங்கி வருகின்றனர்.

“5 ரூபாய் மாஸ்க் ரூ.30க்கு விற்பனை” : அப்பல்லோ மருந்தகத்துக்கு சீல் - திருப்பத்தூரில் அதிரடி!

இதனால், மருத்துவப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் மாஸ்க்குகள் இல்லாமல் அவதியுறும் நிலையில் உள்ளனர். அநாவசியமாக மக்கள் மாஸ்க்குகளை வாங்குவதனால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைக்கு விற்கும் அவலமும் நடந்தேறுகிறது.

ஆகையால், 200 ml கொண்ட சேனிடைசர் பாட்டில் ஒன்று ரூ.100க்கும், சர்ஜிக்கல் மாஸ்க்குகள் தலா ரூ.10க்கும், சாதாரண மாஸ்க்குகள் தலா ரூ.8க்கும் விற்கப்பட வேண்டும் என மத்திய அரசு விலை நிர்ணயித்திருந்தது.

இப்படி இருக்கையில், திருப்பத்தூரில் உள்ள அப்பல்லோ மருந்தகத்தில் அரசு நிர்ணயித்த விலையை மீறி 5 ரூபாய் மாஸ்குகளை ரூ.30க்கும், 30 ரூபாய் மாஸ்க்குகளை ரூ.70க்கும், 50 ரூபாய் மதிப்புள்ள மாஸ்க்குகளை ரூ.100க்கும் விற்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, சோதனையில் ஈடுபட்ட வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், விதிமுறையை மீறிய அப்பல்லோ மருந்தகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories