Corona Virus

ஆந்திரா, தெலங்கானாவில் முழு அடைப்பு... நிவாரணம் அறிவிப்பு - தமிழகத்தில் என்ன செய்துள்ளது அ.தி.மு.க அரசு?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் முழு அடைப்பு உத்தரவு பிறப்பித்து, நிவாரணம் வழங்குவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 நாட்களில் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 72 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் மக்கள் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநிலங்களுக்கிடையேயான எல்லைகளை மூடியதோடு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

ஆந்திரா, தெலங்கானாவில் முழு அடைப்பு... நிவாரணம் அறிவிப்பு - தமிழகத்தில் என்ன செய்துள்ளது அ.தி.மு.க அரசு?

அவ்வகையில் தென்னிந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநில எல்லைகள் மார்ச் 31 வரை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மார்ச் 31 வரை சீல் வைத்து முடக்க இருமாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதனால் அன்றாட கூலித்தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நிதியுதவி குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆந்திராவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும், அடுத்த மாதத்துக்கான ரேசன் பொருட்கள் மார்ச் 29ம் தேதி விநியோகிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

அதேபோல தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும், மார்ச் 31 வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, 87 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 12 கிலோ ரேசன் அரிசி மற்றும் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலங்கானாவில் முழு அடைப்பு... நிவாரணம் அறிவிப்பு - தமிழகத்தில் என்ன செய்துள்ளது அ.தி.மு.க அரசு?

ஆனால் தமிழகத்திலும் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படி இருக்கையில் மத்திய அரசே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க பரிந்துரைத்தும் அ.தி.மு.க அரசு அதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.

இதனால் மக்களிடையே கொரோனா குறித்த அச்ச உணர்வு இல்லாமல் போனால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து, விரைந்து முழு அடைப்பை அமல்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories