Corona Virus

“புதுக்கோட்டை மீட்ஸ் புதுப்பேட்டை”- கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அசத்திய தீயணைப்புத் துறையினர்!

புதுக்கோட்டை தீயணைப்புத் துறையினர், கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுக்கோட்டை தீயணைப்புத் துறையினர், கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘புதுப்பேட்டை’ படத்தில் இடம்பெற்ற ‘வர்றியா...” பாடலுக்கு கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கையாளுதல் உள்ளிட்ட பழக்கங்களை வலியுறுத்தும் விதமாக ஆடியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை புதுக்கோட்டை மீட்ஸ் புதுப்பேட்டை எனக் குறிப்பிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

“புதுக்கோட்டை மீட்ஸ் புதுப்பேட்டை”- கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு அசத்திய தீயணைப்புத் துறையினர்!

சமீபத்தில், கொரோனா விழிப்புணர்வுக்காக கேரள போலிஸார் வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் அனைவரையும் கவர்ந்தது. அந்த வீடியோவில், ‘அய்யப்பனும், கோஷியும்’ திரைப்பட பாடலுக்கு ஏற்றவாறு கேரள போலிஸார் முகத்தில் கவசம் அணிந்து, கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று நடனம் ஆடினர்.

அதுபோன்றே, கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள புதுக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories