Corona Virus

“இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு; உள்ளே நுழையாதீர்கள்” - சென்னையின் 3,000 வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் !

சென்னையில் 3,000 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாநகராட்சி பணியாளர்களால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

“இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு; உள்ளே நுழையாதீர்கள்” - சென்னையின் 3,000 வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் சர்வதேச விமானங்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

“இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு; உள்ளே நுழையாதீர்கள்” - சென்னையின் 3,000 வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் !

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரையும் சேர்த்து 9 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் இருந்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடு சென்று திரும்பியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களின் வீடுகளை தனிமைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வசித்து வரும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

“இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு; உள்ளே நுழையாதீர்கள்” - சென்னையின் 3,000 வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் !

அதன்படி, “கொரோனா தொற்று. உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு” என்று குறிப்பிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் மாநகராட்சி மற்றும் காவல்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களை காவல்துறையினர் முழுமையாகக் கண்காணிப்பார்கள் என்றும் அதனையும் மீறி அவர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories