Corona Virus

"கிராமப்பகுதிகளில் கொரோனா பரவாதா?” - கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டர் பவித்ரா விளக்கம்!

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற பவித்ரா வேங்கடகோபாலன், கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 14 ஆயிரத்திற்கும் அதிகமானோரை உயிர்ப்பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து பட்டம் பெற்ற பவித்ரா வேங்கடகோபாலன் கொரோனா குறித்து விளக்கமளித்துள்ளார்.

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட கொரொனா வைரஸ் குறித்த தகவல்களை தொகுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன்.

"கிராமப்பகுதிகளில் கொரோனா பரவாதா?” - கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டர் பவித்ரா விளக்கம்!

கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு வதந்திகள் உலவிவரும் சூழலில், அந்த வைரஸ் பரவல் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன் அளிக்கும் விளக்கம் தீர்வளிக்கும்.

கொரோனா - சில தகவல்கள்

COVID-19 பாதிக்கப்பட்டால் நூற்றில் 97% குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது.

1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. கொரோனா வைரஸ் இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது. பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் அவசியம் வேண்டும்.

குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் வீரியம் குறைவே. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம் (99.1%).

சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது. பாதிக்கப்பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப்படும். எனவே, பதற்றம் தேவை இல்லை.

"கிராமப்பகுதிகளில் கொரோனா பரவாதா?” - கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டர் பவித்ரா விளக்கம்!

கொரோனா குறித்த வதந்திகளும் உண்மையும்!

1. வெயில் காலத்தில் கொரோனா பரவாதா?

கண்டிப்பாக பரவும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர்காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

2. இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வருமா?

ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். நன்றாக வெந்த உணவில் வைரஸ் பிழைக்காது.

3. நிறைய தண்ணீர் குடித்தால் கொரோனா வராதா?

தேவையான தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

4. இளவயதினருக்கு வராதா?

வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம். குறிப்பாக, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளவர்கள், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

"கிராமப்பகுதிகளில் கொரோனா பரவாதா?” - கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டர் பவித்ரா விளக்கம்!

5. கிராமங்களில் கொரோனா வராதா?

காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

6 மாற்று மருந்துகளில் குணமாகுமா?

எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

7. அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை ஒழித்துக்கட்ட சீனா உருவாக்கிய வைரஸ் என்பது உண்மையா?

இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப்பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டுபிடித்து விட்டனர்.

8. கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்துவிடுமா?

வராது. நம் மீது இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்துவிட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

banner

Related Stories

Related Stories